AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என கடந்த சில நாட்களாக பலர் தவெகவில் இணைந்து வருவது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதியின் எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு
ஜெகத்ரட்சகன் - சந்தீப் ஆனந்த்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jul 2026 21:58 PM IST

சென்னை, ஜூலை 4 : அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என கடந்த சில நாட்களாக பலர் தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதியின் எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த்

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஜூலை 4, 2026 இன்று மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் நடைபெற்றது . இந்த நிலையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் முதல்வர் விஜய், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை என்.ஆனந்த் வழங்கினார்.

இதையும் படிக்க : சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சந்தீப் ஆனந்துடன் சேர்த்து, திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி மற்றும் வி.பி.கலைராஜன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். அவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான வைகைச்செல்வனும் தவெகவில் இணைந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இரு முக்கிய திராவிடக் கட்சிகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒரே நாளில் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தவெகவில் சந்தீப் ஆனந்த்திற்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : போக்சோ வழக்கில் நடவடிக்கை…. ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு புகார்

கடந்த சில வாரங்களாக அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த பிரபல தலைவர்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் மனு அளித்துள்ளனர்.

Follow Us