AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்? பரபரப்பு தகவல்

குதிரை பேரம் தொடர்பான புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறி  திமுக மற்றும் அதிமுகவினர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்? பரபரப்பு தகவல்
செந்தில் பாலாஜி
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jul 2026 19:35 PM IST

சென்னை, ஜூலை 4 : குதிரை பேரம் தொடர்பான புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜூலை 4, 2026 இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்?

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின்படி, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக – எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில் 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : போக்சோ வழக்கில் நடவடிக்கை…. ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு புகார்

இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோரி அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு ஜூலை 4, 2026 சென்ற காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் சம்மனை அளித்துள்ளனர். செந்தில் பாலாஜியின் தந்தை காவல்துறையினர் வழங்கிய சம்மனைப் பெற்றுக் கொண்டார். அந்த சம்மனில் ஜூலை 6, 2026 திங்கள் கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக் குமாரும் தலைமறைவாக இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய, லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிக்க : தவெக அரசுக்கு அடுத்த செக்.. திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிர்ச்சியில் கோட்டை!!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அ்போது பேசிய அவர், திமுகவை எந்த வகையிலாவது வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைக்கு காவல்துறையை வைத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், கத்தி என்பது இரு பக்கமும் கூர்மையானது. அது எந்தப் பக்கமும் வெட்டும் என்பதை அவர்கள் காலத்தால் உணர்வார்கள் என்று பேசினார்.

இந்த நிலையில் தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறி  திமுக மற்றும் அதிமுகவினர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Follow Us