AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஸ்டிக்கர் ஒட்ட வெட்கமா இல்லையா?”.. தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட திமுக.. பதறிய அதிகாரிகள்!!

திமுகவின் இந்தக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் விளக்கத்தில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, "குறிப்பிட்ட அந்த அடிக்கல் நாட்டு கல்வெட்டானது நெடுஞ்சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்தது.

“ஸ்டிக்கர் ஒட்ட வெட்கமா இல்லையா?”.. தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட திமுக.. பதறிய அதிகாரிகள்!!
நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Jul 2026 10:59 AM IST

சென்னை, ஜூலை 06: சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் பொறித்த அடிக்கல் நாட்டு கல்வெட்டு அகற்றப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக தரப்பு சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த முழுமையாக இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க : விவசாய பணிகளில் களமிறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. சம்பளமும் குறைவாக வாங்குகின்றனராம்.. என்ன நடக்கிறது தஞ்சாவூரில்!

நெம்மேலி திட்டப் பின்னணி:

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு அன்றைய திமுக ஆட்சிக்காலத்தில் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முதன்முதலில் கொண்டு வரப்பட்டது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இதற்கான பணிகளை முன்னின்று கவனித்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021-ல் அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சென்னை மாநகராட்சியின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 24.02.2024 அன்று நெம்மேலியில் இரண்டாவது பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். தற்போது இந்தத் திட்டத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.

திமுகவின் ஆவேசக் குற்றச்சாட்டு:

பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் இன்று இந்தத் திட்டப் பணிகளை நேரில் பார்வையிடத் திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினின் பெயர் பொறித்த அடிக்கல் நாட்டு கல்வெட்டு திடீரென அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைக் கண்டித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களுக்கு மேலாகியும், மக்களுக்காக உருப்படியாக எந்தவொரு புதிய திட்டத்தையும் உருவாக்க இவர்களுக்கு வக்கில்லை.” “முந்தைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு கல்வெட்டை அகற்றுவது இவர்களின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.”

“முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்திற்கு, தங்களது அரசே அதைக் கொண்டு வந்தது போல ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதற்காகவே இந்த வரலாற்றுச் சான்றான கல்வெட்டை அகற்றியுள்ளனர். இந்தத் திறமையற்ற தவெக அரசுக்கு வெட்கமாக இல்லையா?” என்று திமுக மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

துறை அதிகாரிகள் அளித்த அதிரடி விளக்கம்:

திமுகவின் இந்தக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் விளக்கத்தில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, “குறிப்பிட்ட அந்த அடிக்கல் நாட்டு கல்வெட்டானது நெடுஞ்சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, அந்தச் சாலையில் தொடர்ந்து சென்ற கனரக மற்றும் இதர வாகனங்களின் அதிர்வுகள் காரணமாக கல்வெட்டில் இருந்த எழுத்துக்கள் சேதமடையத் தொடங்கின.”

“இதனைச் சரிசெய்யும் பொருட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே அந்தக் கல்வெட்டை மீண்டும் சீரமைக்கும் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.” முதலமைச்சர் இன்று இப்பகுதியைப் பார்வையிட வருவதற்கும், கல்வெட்டு அங்கே இல்லாததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது திட்டமிட்டு நீக்கப்படவில்லை, மாறாகப் பராமரிப்புக்காக மட்டுமே தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!

மீண்டும் அந்தக் கல்வெட்டில் இருந்த அதே எழுத்துக்கள், அதே அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணமும், நீண்ட காலத்திற்குத் தாங்கும் வகையிலும் அதிர்வுகளைத் தாங்கும் தொழில்நுட்பத்துடன் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன” என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow Us