AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“சொன்னதைச் செய்துகாட்டிய முதல்வர் விஜய்”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!!

எதற்கெடுத்தாலும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர முயற்சி செய்கிறார்கள் என்று தினமும் காலையில் எழுந்து ஒரு டயலாக்கை பேசி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், நாம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த அரசு மற்றும் ஆட்சி நடக்கும் லட்சணத்தைப் பார்த்தால் நாமெல்லாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை, மக்களே இந்த ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள்.

“சொன்னதைச் செய்துகாட்டிய முதல்வர் விஜய்”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Jul 2026 08:19 AM IST

சென்னை, ஜூலை 06: இஸ்லாமியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (திமுக) இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்றும், சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் காவல் அரணாக இருக்கும் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தமிழ்நாட்டில் ஒரு தற்காலிக அரசியல் பேரிடர் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். எனினும், இந்த அரசியல் பேரிடரிலிருந்து தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் நிச்சயம் முன்னின்று காப்பார்கள் என்றும், நாட்டை மீட்டெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவரது உரையின் முழு விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!

ஆட்சியை மக்களே கவிழ்த்துவிடுவார்கள்:

“எதற்கெடுத்தாலும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர முயற்சி செய்கிறார்கள் என்று தினமும் காலையில் எழுந்து ஒரு டயலாக்கை பேசி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், நாம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த அரசு மற்றும் ஆட்சி நடக்கும் லட்சணத்தைப் பார்த்தால் நாமெல்லாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை, மக்களே நிச்சயம் ஒரு நாள் விரைவில் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் இவர்களுடைய செயல்பாடுகளை மக்கள் எவ்வளவு நாள்தான் தாங்கிக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

சோபா வந்தவுடன் சென்றவர்கள்:

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு என்னென்னவோ மாற்றங்கள் நடக்கின்றன. சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், நீங்கள் அத்தனை பேரும் ‘நாங்கள் என்றைக்கும் கழகத்தோடுதான் இருப்போம்’ என்ற உறுதியோடு இங்கே திரண்டு வந்திருக்கிறீர்கள்” என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் அவர்கள் கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே யார் எம்.எல்.ஏ என்றே தெரியாது, அவரை நாம் எப்படி இழுக்க முடியும்? ஆனால் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? இன்று இருக்கக்கூடிய அரசும், முதலமைச்சரும் அடுத்தடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை ஒவ்வொருத்தராக ‘ஏலச்சீட்டு புல்லிங்கோ’ மாதிரி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என சாடினார்.

இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

இஸ்லாமியர்களின் காவல் அரண் திமுக:

யார் என்ன அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றென்றும் ஒரு காவல் அரணாகத் திகழும். இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான இந்தத் தொப்புள்கொடி உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்றார். மேலும், கடந்த தேர்தலில் யார் எதிரி என்று தெரியாமல் போனதாகக் குறிப்பிட்ட உதயநிதி, தற்போது தங்களுக்கு எதிரி யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது என்றும், அடுத்த தேர்தலில் இவர்களை சும்மா விட்டுவிட மாட்டோம் என்றும் மிக ஆவேசமாக கூறினார்.

Follow Us