AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து.. தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

Fire Accident In Neyveli Lignite Corporation | கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது அங்கு ஊரியர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து.. தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jul 2026 07:10 AM IST

நெய்வேலி, ஜூலை 06 : நெய்வேலி (Neyveli) என்.எல்.சியில் (NLC – Neyveli Lignite Corporation) உள்ள முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது சுரங்கத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததன் காரணமாக அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நெய்வேலி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் உள்ள  பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நெய்வேலி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனமான என்.எல்.சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரில் சுரங்கத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் நேற்று (ஜூலை 05, 2026) இரவு இந்த சுரங்கத்தின் முதல் சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்க பணிக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த மண் அகற்றும் இயந்திரத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது.

இதையும் படிங்க : உயரமான பனைமரமும் இனி அசால்ட் தான்.. தந்தைக்கு உதவியாக மகன் செய்த நூதன முயற்சி.. தூத்துக்குடியில் விநோதம்!

தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

தீ விபத்து நடைபெற்ற நேரத்தில் அந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததன் காரணமாக அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : ஹெல்மெட் அணிந்து வந்தால் கட்டா குஸ்தி 2 டிக்கெட் – தஞ்சாவீரில் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி

இந்த தீ விபத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இருப்பினும்  தீ விபத்து ஏற்பட்டது எப்படி, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us