இதுதான் மாஸ்… இதுதான் க்ளாஸ்… வெளியானது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தின் லான்சிங் வீடியோ
PR Show Movie Launch Video Out Now | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நாயகனாகவும் வலம் வந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அவதாரத்தை எடுத்து உள்ள நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவராக வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கோமாளி. இந்தப் படத்தை எழுதி இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமான பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்தப் படத்திலேயே நாயகனாக அறிமுகம் ஆனார். அதன்படி பிரதீப் ரங்கநாதனே எழுதி இயக்கி நாயகனாக நடித்தப் படம் லவ் டுடே. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆனார் பிரதீப் ரங்கநாதன்.
அதன்படி இவர் இயக்குநராக ஹிட் அடித்தது போல நாயகனாக நடித்த முதல் படத்திலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நாயகனாக தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது புது அவதாரத்தை எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியானது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தின் லான்சிங் வீடியோ:
அதன்படி பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அவதாரத்தை எடுத்து உள்ளார். அதன்படி பிஆர் ஷோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள நிலையில் அந்த நிறுவனம் சார்பாக முதலாவதாக தயாரிக்க உள்ள படத்தின் வீடியோ வெளியிட்டுள்ளது. அதன்படி நாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொந்தேனி, ஸ்வாசிகா, அனாமிகா மஹி, லிசி ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஆரம்பம் சின்ன இடம்தான்… மாஸாக குட்டி ஸ்டோரி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
‘ PR Show ‘ it is ☺️
▶️ https://t.co/ojsSJlBynP#PRS1 #PRNEXTWAVE
Written & Directed by The Alpha Unit
Banner : @prshowofficial
Story and Produced by : @pradeeponelife
A @SaiAbhyankkar Musical@_mamithabaiju @Dir_Ashwath @DKP_DOP @PradeepERagav #RameshNarayanan…— Pradeep Ranganathan (@pradeeponelife) July 6, 2026
Also Read… சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி