தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவத் தலைவர் மறைந்த கே பாக்கியராஜ் நியமனம் – பார்த்திபன் வெளியிட்ட பதிவு!
Tamil Cinema Legend K. Bhagyaraj: கடந்த 2026ம் ஆண்டு ஜூன் இறுதியில் நடிகரும், இயக்குநருமான கே பாக்யராஜ் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பு இன்றுவரையிலும் சோகத்தை ஏற்படுத்தும் நிலையில், தற்போது அவரை தென்னிந்திய திரைப்பட கெழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவ தலைவராக நியமித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த இயக்குநராகவும்,கதாநாயகனாகவும் படங்களில் நடித்து அசத்திவந்தவர் கே பாக்யராஜ் (K Bhagyaraj). சினிமாவில் வெறும் இயக்குநர், நடிகராக மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கிறார். பாரதிராஜாவின் (Bharathiraja) சிஷியனாக இருந்து, சினிமா உலகத்தில் நுழைந்த இவர், அவரை பின்பற்றிய இயக்குநராகவும் ஆனார். பாரதிராஜாவின் படங்களை உதவி இயக்குநராக பணியாற்றி, பின் இயக்குநர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் போன்ற பல்வேறு பணிகளையும் செய்துள்ளார். இவர் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் மாரடைப்பின் காரணமாக காலமானார். இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இறக்கும் காலம் வரையிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் தனது பணிகளையும் செய்துவந்தார். அந்த வகையில் இவரின் மறைவிற்கு பிறகு, தற்போது இவரை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நிரந்தர கௌரவ தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான சிறப்பான பதிவை நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: படமே ரிலீஸாகல.. ஆனால் இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசை கொடுத்த விஷ்ணு விஷால்!
கே பாக்யராஜை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிரந்தர கௌரவ தலைவராக நியமித்தது பற்றி பார்த்திபன் வெளியிட்ட பதிவு:
பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன்.
அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என் மரியாதைக்குரிய இயக்குநர்கள்… pic.twitter.com/MeHGHlPiG0
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 2, 2026
இந்த பதிவில் பார்த்திபன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் அதில் பாக்யராஜ் குறித்து, “தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச் சென்றேன். ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் “நிரந்தர கௌரவத் தலைவர்” திரு. கே. பாக்யராஜ் என்பதே.
இதையும் படிங்க: கட்டா குஸ்தி 2 முதல் டார்க் வரை… தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும். கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டிடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.