விறுவிறுப்பாக நடைபெறும் நானியின் தி பாரடைஸ் படம் – வைரலாகும் முக்கிய தகவல்
The Paradise Movie Update | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள தி பாரடைஸ் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் நடித்து வரும் நடிகர் நானி அவ்வபோது மற்ற பான் இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் நடிகர் நானிக்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளதோ அதே போல தமிழ் சினிமாவிலும் நடிகர் நானிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் படம் வெளியானாலும் அதனை தென்னிந்திய மொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் நானி படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி அவ்வபோது படங்களை தயாரித்தும் வருகிறார்.
தொடர்ந்து படங்களில் பிசியாக பணியாற்றி வரும் நடிகர் நானி தற்போது தி பாரடைஸ் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி வரும் இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகின்றது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோர் நானி உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இந்த மாத இறுதியில் முடியும் நானியுன் தி பாரடைஸ் பட ஷூட்டிங்?
நானியின் தி பாரடைஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ஒரு ‘ஐட்டம்’ பாடல் (சிறப்பு நடனப் பாடல்) இடம்பெற்றுள்ளது; அதற்கான படப்பிடிப்பு இன்னும் நடைபெறவில்லை. இந்தப் பாடலில் எந்த நடிகை நடனமாடப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
A song sequence and the climax scene of #Nani’s #TheParadise are the only portions left to be shot. The team is planning to complete the entire shooting by the end of this month.
There is an item song in this film, and the shooting for this song has not been done yet. Let’s wait… pic.twitter.com/EtSpKBiKdj
— Movie Tamil (@_MovieTamil) July 1, 2026
Also Read… புலி வேட்டைக்குத் திரும்புகிறது… இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்