AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் – வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்

GV Prakash Kumar X post viral on social media | தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கும் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் – வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2026 10:37 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் ஒரு பக்கம் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் மற்றொரு பக்கம் இவரது நடிப்பிலும் தொடர்ந்து படங்கள் வரிசைக்கட்டி வெளியாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமாரின் படங்கள் மற்றும் பாடல்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது அவரது இசையில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தொடர்பான அப்டேட்டை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்து உள்ளார். மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி தனது வாத்தி படத்திற்காக முதன்முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி வைத்தார். அதனைத் தொடர்ந்து லக்கி பாஸ்கர் மற்றும் தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என அடுத்தடுத்து மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ளனர்.

சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள்:

இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஒரு பாடல் பாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பாடலை கென் கருணாஸ் எழுதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, சூர்யா சார் ரசிகர்களே, இதுவரை இல்லாத அளவிற்கு அவரது மிகச்சிறந்த குரல்வளத்தை நீங்கள் இந்த முறை கேட்கப்போகிறீர்கள். எப்போதும் போலவே, தி ஒன் (THE ONE) குறித்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எனக்கு ஸ்வாசிகா – மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம்… விஜய் ஆண்டனி கலகல பேச்சு

Follow Us