AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போட்டோவில் கியூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? மலையாளம் டூ தமிழில் நுழைந்த நடிகை இவர்!

Actress Childhood Photo : இணையதளங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த விதத்தில், இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இவர் மலையாளம் சினிமா மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்.

போட்டோவில் கியூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? மலையாளம் டூ தமிழில் நுழைந்த நடிகை இவர்!
மலையாள நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jun 2026 08:39 AM IST

சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த வகையில் மேல இருக்கும் புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இவர் தமிழில் தற்போது இளம் நடிகையாக பிரபலமானவர் (Malayalam Actress). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை இரு படங்களே வெளியாகியிருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான மலையாளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் வினீத் வாசுதேவன் (Vineeth Vasudevan) இயக்கி நடித்திருந்தார். இப்படம் இவருக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து இவர் நடிகர்கள் பாசில் ஜோசப் (Basil Joseph) மற்றும் நஸ்லென் (Naslen) போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் கடந்த 2025ம் ஆண்டில் இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இவர் தனது முதல் தமிழ் படத்தில் அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடித்தார். இதில் விக்ரம் பிரபு (Vikram Prabhu) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது இந்த சிறுமி யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். வேறுயாருமில்லை சிறை பட புகழ் நடிகை அனிஷ்மா அனில்குமார்தான் (Anishma Anilkumar).

இதையும் படிங்க: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!

அனிஷ்மா அனில்குமாரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Ken Karunaas (@kenkarunaas)

நடிகை அனிஷ்மா அனில்குமார் கடந்துவந்த பாதை :

நடிகை அனிஷ்மா அனில்குமார் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவர் தனது பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்புவரை கேரளாவில் பயின்றார். கடந்த 2023ம் ஆண்டில் இயக்குநர் வினீத் வாசுதேவன் இயக்கி, நடித்திருந்த பூவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்க்கு போன் தெக்கு வடக்கு என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக நஸ்லெனுக்கு ஜோடியாக ஐ அம் காதலன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமானது இருவருக்குமே நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் வெற்றியை அடுத்ததாக பேசில் ஜோசப் நடித்திருந்த மரண மாஸ் என்ற படத்திலும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: வாரணாசி படத்தில் அதையெல்லாம் அனுபவிப்பீர்கள்.. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சொன்ன விஷயம்!

இவ்வாறு மலையாளம் சினிமாவில் கலக்கிவந்தார். இதையடுத்து இவர் தமிழில் அறிமுகமான முதல் படம்தான் சிறை. இயக்குநர் சதமிழ் எழுத்தில், சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அறிமுக நடிகர் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார். இது விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளியான நிலையில், சிவப்பான வரவேற்பை தமிழில் பெற்றது. இதற்கு பின் அனிஷ்மா, கென் கருணாஸிற்கு ஜோடியாக யூத் என்ற படத்தில் நடித்த ஹிட் கொடுத்திருந்தார். தற்போது மொத ராத்திரியின் என்ற படத்தில் லீட் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us