AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: அப்போவே ராஞ்சனா படம் ஹிட்டாகிடுனு எனக்கு தெரியும் – தனுஷ் குறித்து நட்டி நடராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Natty Natraj About Dhanush: தமிழ் சினிமாவில் கேமராமேனாகவும், தற்போது நடிகராகவும் கலக்கிவருபவர் நட்டி நடராஜ். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், ராஞ்சனா படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷ் செய்த சுவாரஸ்ய விஷயம் மற்றும் மற்றும் ஹிட்டாகும் என்பது குறித்து அவர் பேசியது பற்றி தெரிவித்துள்ளார்.

Dhanush: அப்போவே ராஞ்சனா படம் ஹிட்டாகிடுனு எனக்கு தெரியும் – தனுஷ் குறித்து நட்டி நடராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
தனுஷ் மற்றும் நட்டி நடராஜ்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jun 2026 08:40 AM IST

கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் கவர்ந்துவருபவர் நாட்டி நடராஜ் (Natty Natraj). இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மீறல் பணியாற்றிவருகிறார். ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக படங்களில் பணியாற்றிவந்தார். அதை தொடர்ந்து, தற்போது படங்களில் நடிகராகவும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் வெளியான படம்தான் TN2026. இப்படத்தை தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா (Umapathy Ramaiah) இயக்கியிருந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் தொடர்ந்து புது படங்களில் நடித்துவருகிறார்.

மேலும் சமீபத்தில் சூப்பர் ஹிட்டதித்திருந்த கருப்பு படத்திலும் (Karuppu) நடித்திருந்தார். இப்படமானது கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனுஷின் (Dhanush) ராஞ்சனா (Raanjhanaa) படத்தின் ஷூட்டிங்கின்போது, நடந்த சுவாரஸ்ய விஷயம் குறித்து அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி ஒரு காதல் யாருக்குதான் பிடிக்காது… மலையாள சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உள்ள இந்த மதுரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

தனுஷின் ராஞ்சனா படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்ய தகவல் குறித்து நட்டி நடராஜ் சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய நட்டி நடராஜ் பேசுகையில், “ராஞ்சனா படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால். அந்த படத்தின் காட்சி ஒண்றில், சோனம் கபூரின் கையை பிடித்து தனுஷ் இழுப்பாரு. அப்போது அவங்க கன்னத்திலே ஒரு அரை விடுவாங்க. அதற்கு பின் தனுஷ் சார் டான்ஸ் ஆடுவார். அப்போது அந்த டான்ஸை சொல்லிக்கொடுக்கணுமான்னு டிரெக்ட்ர் கேட்டாரு. ஆனா தனுஷ் அவரே நான் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு.

இதையும் படிங்க: அந்த பெண் 100 பார்வதிக்கு சமம் – பூ படம் குறித்து பேசிய இயக்குநர் சசி

சோனம், தனுஷை கன்னத்தில் அரைந்தும், பின்னாடி ஒரு இந்தி பாட்டு ஓடும். தனுஷ் கிட்டத்தட்ட அவரை சுத்தி 5000 பேர் இருக்காங்க. ஆனா தனுஷ் சூப்பரா டான்ஸ் ஆடுனாரு. அப்பவே எனக்கு தெரிஞ்சிட்டு ராஞ்சனா சூப்பர் ஹிட்டாகும் என, அதே போலவே இப்போதும் அப்படம் எல்லாரிடமும் பேசப்படுகிறது என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

நட்டி நடராஜ் தனது TN2026 படம் குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by KANNAN RAVI GROUPS (@krgoffl)

மேலும் இவர் தற்போது புது திரைப்படங்களுக்கான பணிகளில் உள்ளார். இவர் கருப்பு படத்தில் இறுதியாக நீதிபதியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இதையடுத்து புதிய படங்களிலும் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us