AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த பெண் 100 பார்வதிக்கு சமம் – பூ படம் குறித்து பேசிய இயக்குநர் சசி

Director Sasi talks about Poo movie | தமிழ் சினிமாவில் பல சிறந்த படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குநர் சசி. இவர் சமீபத்தில் தான் இயக்கிய பூ படத்திற்கு முதல் தேர்வு பார்வதி இல்லை என்று கூறியது வைரலாகி வருகின்றது.

அந்த பெண் 100 பார்வதிக்கு சமம் – பூ படம் குறித்து பேசிய இயக்குநர் சசி
பார்வதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 11:49 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பூ. ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சசி இயக்கி இருந்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். அதன்படி எழுத்தாளர் தமிழ் செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் படம். இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பார்வதி திருவோத்து (Actress Parvathy Thiruvothu) நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மைலா, இனிகோ பிரபாகரன், பூ ராம், இன்பனிலா, அஸ்வந்த் திலக், கந்தசாமி, பெரிய கருப்பு தேவர் மற்றும் பரவை முனியம்மா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான மோசர் பேர் என்டர்டெயின்மென்ட் மற்றும் நெசகி சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் மோசர் பேர் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெறறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் சசி சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பணியாளரை அடைத்து வைத்தாரா? நகைகள் திருடப்பட்டதாக ரவி மோகன் புகார் – என்ன நடந்தது?

பூ படத்தில் நாயகியாக பார்வதி முதல் சாய்ஸ் கிடையாது:

அந்தப் பேட்டியில் சசி பேசியதாவது, பூ படத்திற்காக சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைக்கு தினமும் சென்று வந்தேன். அப்போது அந்த ஆலையில் வேலை செய்யும் தமிழ்ச்செல்வி என்ற பெண் என்னிடம் மிகவும் நன்றாக பேசினார். அவர் என் மனதில் இருந்த மாரி மாதிரி அப்படியே இருந்தார். அதன் காரணமாக நான் அந்தப் பெண்ணிடம் சினிமாவில் நடிக்கிறாயா என்று கேட்டேன். பதட்டமான அந்த பெண் அடுத்த நாளில் இருந்து வேலைக்கே வரவில்லை. அந்த தமிழ்ச்செல்வி 100 பார்வதிக்கு சமம் என்று இயக்குநர் சசி தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நா பேசுனாலே பிரச்சனைதான்… தர்மன் பட விழாவில் ரஜினிகாந்தின் கலகல பேச்சு – வைரலாகும் வீடியோ

Follow Us