சென்னை வந்த பிரபல பாலிவுட் நடிகர்… ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நாயகன் கேமியோ கன்ஃபார்மா?
Hrithik Roshan has arrived in Chennai to participate in the shooting of Jailer 2 | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் கூலி. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Actor Super Star Rajinikanth) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினைப் போல ஜெயிலர் 2 படமும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் அந்தப் படத்தில் பலர் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது போல இந்த இரண்டாவது பாகத்திலும் நடிகர்கள் பலர் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளனர். அதில் குறிப்பாக பாலிவுட்டில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் கேமியோ வேடத்தில் நடிக்கிறார்.




ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நாயகன் கேமியோ கன்ஃபார்மா?
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹிருத்திக் ரோஷன் நேற்று 22-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு சென்னை வந்துள்ளார். இவர் விமான நிலைய ஊழியர்கள் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#HrithikRoshan Landed at Chennai ✈️
Nelson proved that he is strong giving in Cameo performance for stars in #Jailer Part-1 itself. Expecting the same kind of Sambavam for #Jailer2💯
Theatres gonna be blast when Superstar #Rajinikanth & HrithikRoshan appears together on the… pic.twitter.com/XK3O13jSp2
— AmuthaBharathi (@CinemaWithAB) June 22, 2026
Also Read… Thalaivar173: சென்னையில் தொடங்கியது ரஜினிகாந்தின் தலைவர்173 பட ஷூட்டிங்?