அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்
Nelson Dilipkumar is set to direct actor Suriya's 50th film | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை இயக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டப் படம் கருப்பு. இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவானது குறிப்பிடத்தக்கது. இந்தப் கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இன்றி அவர் படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்து இருந்தார். இதுவரை காமெடி, நாயகன் மற்றும் குணசித்திர வேடங்களில் மட்டும் நடித்த ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தின் மூலம் வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே வெகுவாகப் பாராட்டப்பட்டது. மேலும் படம் உலக அளவில் 350 கோடிகள் வரை வசூல் செய்தது. இந்தப் படத்தின் வசூல் தான் நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். அந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. மேலும் சூர்யா 47 படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்தப் படங்களை இயக்க உள்ளது யார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் இவர்தானா?
அதன்படி நடிகர் சூர்யாவின் 48-வது படத்தை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளார் என்றும் 49-வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் முன்னதாக வெளியாகி வைரலான நிலையில் தற்போது அவரது 50-வது படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளது மிகவும் உறுதியாக வைரலாகி வருகின்றது. அதன்படி 50-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெய்மெண்ட்ஸ் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நெல்சனின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நிறுவனம் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தான் சூர்யாவின் 50-வது படத்தை இயக்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது சினிமா வட்டாரங்கள்.
Also Read… Engal Thangam: சமந்தாவின் மாஸ் கம்பேக்.. முதல் நாளில் எங்கள் தங்கம் படத்தின் வசூல் இத்தனை கோடியா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Wishing the blockbuster maker, our dearest @Nelsondilpkumar garu a very Happy Birthday! 🤩#HBDNelson pic.twitter.com/cZh2Cy1EVu
— Sithara Entertainments (@SitharaEnts) June 21, 2026
Also Read… கருப்பு படத்தில் சாக்லேட் காபி காட்சியை நடிக்கத் தயங்கினேன் – சாண்டி ஓபன் டாக்