AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை சியாமந்தா.. குவியும் வாழ்த்து!

Syamantha Anand Selvam Marriage: சின்னத்திரையில் கிட்டத்தட்ட 15 அன்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருபவர் நடிகை சியாமந்தா. இவர் விஜய் டிவி முதல் சன் டிவி வரை பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல சீரியல் நடிகர் ஆனந்த் செல்வம் என்பவரை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை சியாமந்தா.. குவியும் வாழ்த்து!
சியாமந்தா மற்றும் ஆனந்த் செல்வம் திருமணம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jun 2026 17:35 PM IST

தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தயில், துணை நடிகை, வில்லன் மற்றும் சீரியலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சியாமந்தா (Syamantha). இவர் சின்னத்திரை தொடர்களில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். இவர் விஜய் டிவி (Vijay TV), சன் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள. இவர் சரவணன் மீனாட்சி (Saravanan Menatchi), தென்றல் வந்து என்னை தொடும் என பிரபல சீரியல்களில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள. மேலும் தற்போது இவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள, “ஒண்ணா இருக்க கத்துக்கணும்” என்ற சீரியலிலும் நடித்துவருகிறார். பிரபல சீரியல் நடிகரான ஆனந்த் செல்வம் (Anand Selvam) என்பவரை காதலித்துவந்த நிலையில், இந்த காதல் ஜோடியானது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இன்று 2026 ஜூன் 18ம் தேதியில், இவர்கள் இருவரின் காதல் தற்போது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண பந்ததியில் இணைந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் பல்வேறு சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இந்த ஜோடிக்கு இணையத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்… வைரலாகும் அரசன் படத்தின் அப்டேட்

நடிகை சியாமந்தா மற்றும் ஆனந்த் செல்வம் திருமணம் குறித்து வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

நடிகை சியாமந்தா மற்றும் ஆனந்த் செல்வம் திருமணத்தில் சீரியல் பிரபலன்கள் :

இந்த திருமண விழாவில், விஜய் டிவியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி புகழ் பவித்ரா ஜனனி, ரஞ்சனா, ஸ்ரீதேவி அசோக், தமிழ் ரித்திகா மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து கலந்துகொண்டனர். நடிகை சியாமந்தா மற்றும் ஆனந்த் செல்வத்தின் காதல் தற்போது திருமணத்தில் இணைந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு வாழ்த்து குவிந்துவருகிறது.

இதையும் படிங்க: எங்கள் தங்கம் பட ரிலீஸ்.. கணவருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா!

யார் இந்த ஆனந்த் செல்வம் :

நடிகர் ஆனந்த் செல்வம், தமிழ் சின்னத்திரை பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, இதையடுத்து அதே ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் அயலி என்ற சீரியலிலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த சீரியலில் “சிவா” என்ற வேடத்தில் அவர் நடித்துவருகிறார். இவரும் நடிகை சியாமந்தாவும் நீண்ட நாட்களாக காதலிடுவந்த நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us