AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாறு திரும்புகிறது… மகனை நாயகனாக்கும் தனுஷ்? வைரலாகும் தகவல்

Dhanush is directing a film in which his son Yatra will be making his acting debut | தமிழ் சினிமாவில் தனது தந்தையின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் தற்போது அவரது மகனை நடிகராக அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரலாறு திரும்புகிறது… மகனை நாயகனாக்கும் தனுஷ்? வைரலாகும் தகவல்
தனது மகன் யாத்ரா உடன் நடிகர் தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 16:32 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி அனைத்து மொழிகளிலும் வாரிசு நடிகர்களின் வருகை என்பது மிகவும் இயல்பான ஒன்றாக தற்போது உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜா தனது இரண்டு மகன்களையும் நாயகனாகவும் இயக்குநராக அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி மூத்த மகன் செல்வராகவனை இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் நாயகனாகவும் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். இதில் இயக்குநராக அறிமுகம் ஆன செல்வராகவன் தற்போது தொடர்ந்து படங்களில் தற்போது நடிகராக நடித்து வருகிறார். அதன்படி நாயகனாக நடித்து வரும் நடிகர் தனுஷ் அவ்வபோது படங்களை இயக்குவதும் செய்து வருகிறார். தொடர்ந்து அவர் நாயகனாக நடித்தப் படங்களை மட்டுமே இயக்கி வந்த தனுஷ் தனது அக்கா மகன் பவிஷின் படத்தின் மூலம் மற்ற நடிகர்களின் படங்களையும் இயக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் நாயகனாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் தனுஷ் தற்போது தனது மகன் யாத்ராவை நடிகராக அறிமுகம் ஆக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரலாறு திரும்புகிறது என்ற வார்த்தைக்கு ஏற்ப தனது தந்தையின் இயக்கத்தில் அறிமுகம் ஆன தனுஷ் தற்போது தனது மகன் அறிமுகம் ஆகும் படத்தை இயக்க உள்ள செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

வரலாறு திரும்புகிறது… மகனை நாயகனாக்கும் தனுஷ்?

தனுஷ் இயக்கும் ஒரு திரைப்படத்தின் மூலம் அவரது மகன் யாத்ரா நடிகராக அறிமுகமாகவுள்ளார். D 55 படத்தைத் தயாரிக்கும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. யாத்ரா ஏற்கனவே தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். தனுஷ் இயக்கும் யாத்ராவின் முதல் திரைப்படம், ஒரு பிரம்மாண்டமான வணிக ரீதியிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான விளம்பரக் காட்சிப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. விரைவில் இதற்கான பிரம்மாண்டமான பூஜை விழாவும் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Anjali: அஞ்சலியின் பிறந்தநாள்.. மகுடம் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Madonna Sebastian: நான் உடனடியாக இந்த கதையுடன் ஒன்றிவிட்டேன்.. ஹார்டின் படம் குறித்து மடோனா செபாஸ்டியன் பேச்சு!

Follow Us