AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Madonna Sebastian: நான் உடனடியாக இந்த கதையுடன் ஒன்றிவிட்டேன்.. ஹார்டின் படம் குறித்து மடோனா செபாஸ்டியன் பேச்சு!

Madonna Sebastian About Heartin Movie: மலையாள சினிமாவின் மூலமாக பிரபலமானவர் மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தமிழில் இவர் நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஹார்டின். இதன் நிகழ்ச்சியின்போது இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

Madonna Sebastian: நான் உடனடியாக இந்த கதையுடன் ஒன்றிவிட்டேன்.. ஹார்டின் படம் குறித்து மடோனா செபாஸ்டியன் பேச்சு!
மடோனா செபாஸ்டியன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Jun 2026 19:46 PM IST

சினிமாவில் தனது நடிப்பின் ஆளுமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மடோனா செபாஸ்டியன் (Madonna Sebastian). இவர் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக நுழைந்தார். இந்த படமானது இவருக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியது. இதையடுத்து தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் படங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை மேம்படுத்தியிருந்தார். இவர் இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் “காதலும் கடந்து போகும்” (Kadhalum Kadandhu Pogum) என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார். மேலும் கவண், பா.பாண்டி, ஜாலியோ ஜிம்கானா என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்திருந்தார். மேலும் முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான லியோ (Leo) படத்தில், அவரின் உடன்பிறந்த தங்கையாக இவர் நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின், தமிழில் இவர் நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஹார்டின் (Heartin). இப்படத்தில் சந்தனாத் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவரின் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், இப்படத்தில் நடித்த தருணம் மற்றும் இதன் கதைக்களம் பற்றி விளக்கமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

ஹார்டின் படத்தின் கதைக்களம் மற்றும் நடித்த தருணம் குறித்து பகிர்ந்த மடோனா செபாஸ்டியன்:

அந்த நிகழ்ச்சியில் மடோனா செபாஸ்டியன் பேசுகையில், “ஹார்டின் படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போதே உடனடியாக கதையுடன் ஒன்றிவிட்டேன். பல ஆண்டுகளாக, நாம் பல காதல் கதைகளை பார்த்திருந்தாலும், ஹார்டின் படம் உணர்வுகளின் புத்துணர்ச்சியை தூண்டும் கலவையும், மனத்தைத் தொடும் தருணங்களையும் கொண்டுவருகிறது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வரையுங்கள், திறந்த மனதுடன் இப்படத்தை பாருங்கள். உண்மையிலே இப்படம் நன்றாக இருக்கும்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் குரலில் அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமா வாமா பாடல்!

ஹார்டின் படம் குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் பேசியது குறித்து வைரலாகும் பதிவு:

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கும் படமாக ஹார்டின் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இப்படத்தை இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

Follow Us