AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் குரலில் அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமா வாமா பாடல்!

Vama Vama Song from the Atharvaa starrer Idhayam Murali has been released | தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் நாயகன்கள் தொடர்ந்து பாடல்களைப் பாடுவதையும் வழக்கமாக வைத்து உள்ளனர். அந்த வகையில் அதர்வாவின் படத்திற்காக நடிகர் தனுஷ் பாடிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

தனுஷ் குரலில் அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமா வாமா பாடல்!
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2026 17:07 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் கால் பதிக்காத துறையே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதன்படி நடிகர் தனுஷ் நாயகனாக மட்டும் இன்றி, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர் முன்பு எல்லாம் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். ஆனால் தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் பாட அழைத்தால் அதனையும் ஏற்று தொடர்ந்து பாடி வருகிறார். அப்படி நடிகர் தனுஷ் குரலில் வெளியாகும் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து படங்களில் பாடல்களைப் பாடி வருகிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் வெளியான நாட்டு சரக்கு என்ற பாடலைப் பாடியதன் மூலம் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகும் படங்களிலும் மற்ற நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து பாடல்களையும் பாடி வருகிறார். இறுதியாக தனுஷ் அவரது நடிப்பில் வெளியான கர படத்திலும் பாடல்களைப் பாடியது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் குரலில் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமாவாமா பாடல்:

இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள இதயம் முரளி என்ற படத்தில் தற்போது பாடலைப் பாடியுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது வாமா வாமா என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ள நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Arya: விடுதலை போராளியாக ஆர்யா.. வெளியானது அனந்தன் காடு பட அதிரடி ட்ரெய்லர்!

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இனி அரைமணி நேரமில்ல 1 மணி நேரம்.. விஜய் டிவியில் இனி ஒரு மணிநேரம் வெளியாகும் சீரியல் எது தெரியுமா?

Follow Us