AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பாடிய தனுஷ் – அப்டேட் கொடுத்த படக்குழு

Vaama Vaama single from Idhayam Murali movie | தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இந்தப் படத்தில் இருந்து பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதனை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பாடிய தனுஷ் – அப்டேட் கொடுத்த படக்குழு
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 14:20 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இவர் இறுதியாக பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் இவர் இந்த பராசக்தி படத்தில் நாயகனின் தம்பியாக நடித்து இருந்தார். நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தாலும் அதர்வாவின் கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் இதயம் முரளி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி தயாரித்து உள்ளார். மேலும் படம் வருகின்ற 10ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பாடிய தனுஷ்:

அதன்படி இந்தப் படத்தில் அதர்வா முரளி உடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படத்தில் நடித்தது மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் எஸ் தமன் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் இதயம் முரளி படத்தில் இருந்து அடுத்தப் பாடலாக வாமா வாமா என்ற பாடல் நாளை 16-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக படக்குழு புரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது ஓ…! சுகுமாரி படத்தின் டீசர்

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!

Follow Us