இயக்குநர் இமையத்திற்கு மரியாதை.. புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய சசிகுமார்!
Sasikumar Film Shoot Starts with Tribute; சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்திவருபவர் சசிகுமார். சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா மறைந்த நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தி தனது புதிய படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார் (Sasikumar). இவர் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் மற்றும் இயக்குநராக பணியாற்றி அதன்பிறகே சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிகராகவே படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மை லார்ட் (My Lord) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து புது புது திரைப்படங்களில் சசிகுமார் நடித்துவருகிறார். மேலும் சமீபத்தில் பிரபல இயக்குநரான பாரதிராஜா (Bharathiraja) உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரின் இறப்பை ஈடுகட்டமுடியாதது என சசிகுமார் இரங்கல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். பாரதிராஜாவின் உடல், 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியில், அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் சசிகுமாரின் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுவதற்கு முன், சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இயக்குநர் இமையம் பாரதிராஜாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன் பிறகே இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியதாக கூறப்படுகிறது.




இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புது படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – அர்ச்சனா கல்பாத்தி!
பாரதிராஜாவிற்கு மரியாதை செலுத்தி புது படத்தின் ஷூட்டிங் பணியை தொடங்கிய சசிகுமார் குறித்த பதிவு:
Actor #Sasikumar and the entire team of his upcoming film paid their heartfelt tribute to legendary director #Bharathiraja sir..⭐ pic.twitter.com/G6q5dnBhiK
— Laxmi Kanth (@iammoviebuff007) June 12, 2026
நடிகர் சசிகுமாரின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 படங்கள் உருவாகியுள்ளது. இறுதியாக மை லார்ட் படமானது வெளியாகியிருந்த நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு இரண்டாம் உலகப்போர் என்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. சர்ப்ரைஸாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு காரை பரிசளித்த சூர்யா!
இதில் சசிகுமாருடன் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கிவரும் நிலையில், சிறப்பாக தயாராகியுள்ளது. இன்னும் இப்படமானது உருவாகிவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்:
தமிழ் சினிமாவில் பேமஸ் நடிகராக இருந்துவருபவர் சசிகுமார், இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் இயக்கத்தில் இதுவரை 2 படங்களே வெளியாகியிருந்தாலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இறுதியாக 2010ம் ஆண்டில் வெளியான ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.