RJ Balaji: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. சர்ப்ரைஸாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு காரை பரிசளித்த சூர்யா!
Suriya's Luxury Car Gift to RJ Balaji: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் கருப்பு திரைப்படமானது வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு சூர்யா கார் ஒன்றை பரிசாக வாங்கியுள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி, கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்தது. இப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 4 கெட்டப்பில் நடித்திருந்தார். வேட்டை கருப்பு, காவக்கார கருப்பு, வழக்கறிஞர் மற்றும் துரை சிங்கம் போன்ற வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை திரிஷா (Trisha), ஸ்வாசிகா (Swasika), ஷிவதா (Shivada), அனகா மாய ரவி, இந்திரன்ஸ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் ஏறும் கருப்பசாமி என்ற கதைக்களத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் போன்றவர்களுக்கு ரூ 30 லட்சம் மதிப்புள்ள காரை சூர்யா பரிசாக வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜிக்கு உயர்தர கார் ஒன்றை பரிசாக சூர்யா வழங்கியுள்ளார். இது குறித்த பதிவை ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: இன்று திரையரங்குகளில் வெளியான ஹபீபி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ
தனது கார் பரிசளித்த சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு உயர்தர காரை சூர்யா பரிசளித்துள்ளார். தனக்கு கார் ஓட்ட தெரியாது என பல நேர்காணல்களில் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் தனது அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் சூர்யா அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில், சூர்யாவே அந்த புது காரை ஒட்டியபடியான வீடியோவை இவர் பகிர்ந்துள்ளார்.
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி:
அந்த பதிவில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஆர்.ஜே.பாலாஜி, “முதல் நாளிலிருந்தே நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்தீர்கள். அந்த ஒரு நம்பிக்கை ஒரு கனவானது, அந்த ஒரு ஆதரவு என் வாழ்வில் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. அதுவே கருப்பு படம் உருவாக்கி காரணம். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியாகத் தொடங்கியது, இந்த மெகா பிளாக்பஸ்டர் உருவானது.
இதையும் படிங்க: லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்
இதெல்லாம் தி ஒன் சூர்யா சார் இல்லாமல், எதுவும் சாத்தியமாகியிருக்காது. நீங்கள் என் வாழ்க்கையை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டீர்கள், உங்களை நேசிக்கிறேன் சார். உங்கள் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் இந்த அழகான உறவிற்கும் மிக்க நன்றி” என அந்த பதிவில் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.