AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

Ajith Kumar recent photos with family | கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் கார் ரேஸிங்கில் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் குடும்பத்தினர் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்
குடும்பத்தினருடன் அஜித்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 14:16 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் சினிமாவில் நடிகராக நடிக்க வருவதற்கு முன்பு ரேஸிங்கில் ஆர்வம் காட்டி வந்தார். பிறகு நடிக்கத் தொடங்கிய பிறகு அவ்வபோது தனது ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிற்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு ரேஸிங்கிலும் கவனம் செலுத்து வருகிறார். தொடர்ந்து நடிப்பு ரேஸிங் என பிசியாக வலம் வரும் அஜித் குமார் ஒரு கார் ரேஸிங் அணியை உருவாக்கி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.

மேலும் நடிகர் அஜித் குமார் பல நாடுகளில் இந்தியாவிற்கு சார்பாக போட்டியிட்டு பல பரிசுகளையும் தொடர்ந்து குவித்து வருகிறார். இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அதன் பிறகு தற்போது வரை பிசியாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித்:

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் குமரின் தாயார் உயிரிழந்தார். அந்த நிகழ்விற்கு பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். அவர் தற்போது பிரான்ஸில் உள்ள லீ மான்ஸில் ரேஸிங் ட்ராக்கில் பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் அங்கு அஜித் குமார் புகைப்படங்களை எடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டியூட் 2 படமானது உருவாகுமா? – இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலிவுட் நாயகன் – அட இவரா?

Follow Us