டியூட் 2 படமானது உருவாகுமா? – இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!
Director Keerthiswaran About Dude 2: தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் கீர்த்திஸ்வரன். இவரின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற படம் டியூட். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், டியூட் 2 படம் உருவாகுமா? என்பது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) உதவி இயக்குநராக பணியாற்ற, கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டியூட் (Dude) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran). இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான படம்தான் டியூட். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சரத்குமார் (SarathKumar), ரோகிணி மற்றும் ஹிருது ஹூரன் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக டியூட் 2 படம் உருவாகுமா? என்ற கேள்விக்கு, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்திஸ்வரன் விளக்கம் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சேயோன் படக்குழு
டியூட் 2 திரைப்படம் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் விளக்கம்:
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் அதில், “நான் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு ஐடியாவை முன்வைத்தேன். அவருக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது. அதில் டியூட் படத்தின் தொடர்ச்சியும் இருக்கிறது. டியூட் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்ததால், அவருக்கு நான் கூறிய கதையை டியூட் 2 படமாக தொடரலாம் என தெரிவித்தேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!
டியூட் 2 படம் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
#Dude2 – I recently threw an idea to #PradeepRanganathan. He really liked it, and there is the spirit of #Dude in it. If it develops well and works well, we can make a sequel, as there is a direct continuation.
I am very happy with the response to Dude. It’s a big journey, a… pic.twitter.com/xhIyk0H9cB
— Movies Singapore (@MoviesSingapore) June 9, 2026
இயக்குநர் கீர்த்திஸ்வரன் தற்போது புதிய படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இருக்கிறாராம். இவர் சிலம்பரசனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அதற்கான கதையை எழுதிவருவதாகவும் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். இப்படம் ஆக்ஷன், காமெடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படம் அரசன் திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது டியூட் படத்தை போலவே சிலம்பரசனுக்கும் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



