6 நாட்களில் ராம் சரணின் பெத்தி படம் வசூலித்தது எவ்வளவு? அப்டேட் இதோ
Peddi Movie Box Office Collection Update For 6th Day | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தின் வசூல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ராம் சரண். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இவர் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தகக்து. தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தொடர்ந்து இவரது படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கிய இந்த பெத்தி படம் கடந்த 04-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 6 நாட்களைக் கடந்துள்ல நிலையில் படத்தின் வசூல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்து உள்ளார். இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பெத்தி படம் 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




6 நாட்களில் ராம் சரணின் பெத்தி படம் வசூலித்தது எவ்வளவு?
அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த பெத்தி படம் 6 நாட்களில் உலக அளவில் 300 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளது. இந்தியாவில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்த இந்தப் படம் தற்போது உலக அளவில் ரூபாய் 332.1 கோடிகள் வசூலித்து உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையேயும் படக்குழுவினர் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… சிறுத்தை சிவா சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன தனுஷ்? வைரலாகும் தகவல்
பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Peddi collects a gross of over 332.1 CRORES WORLDWIDE in 6 days ❤🔥
BOX OFFICE CHAMPION reigning at the top 💥💥#PEDDI Now In Cinemas 💥https://t.co/xclVAMz8oI pic.twitter.com/rn5qFwTxCL
— Mythri Movie Makers (@MythriOfficial) June 10, 2026
Also Read… படப்பிடிப்பை தொடங்கியது சியான் 63 படக்குழு – வைரலாகும் போஸ்டர்