Peddi: 5 நாட்களில் வசூலில் சாதனை.. பெத்தி திரைப்படத்தின் அபார வசூலை அறிவித்த படக்குழு!
Peddi Movei 5-Day Collection: தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பெத்தி திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்துவருகிறது. இப்படம் வெளியாகி 5வது நாளை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ராம் சரணின் (Ram Charan) நடிப்பில் 16வது படமாக திரையரங்குகளில் வெளியாகியிருப்பதுதான் பெத்தி திரைப்படம் (Peddi). இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் விளையாட்டு சார்ந்த இஸ்பிரேஷன் படமாக வெளியாகியிருந்தது. இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா (Bhuchi Babu Sana) இயக்க, அவருடன் புஷ்பா பட இயக்குநர் சுகுமாரும் (Sukumar) இப்படத்தை இணைந்து இயக்கியிருக்கிறார். இதில் ராம் சரண் விளையாட்டு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக,, பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கதாபாத்திரம் முழுவதும் கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இப்படம் வெளியாகிய முதல் நாளிலே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இதற்கு பதில் தெரிவித்த இயக்குநர் புச்சி பாபு சனா, அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்றுடன் (09/06/2026) இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 5 நாட்களை கடந்திருக்கும் நிலையில், வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: தலைவர் 173-ல் டாக்டராக ரஜினிகாந்த்..? அஸ்வத் இயக்கத்தில் இதுவரை நடித்துடாத வேடத்தில் சூப்பர் ஸ்டார்!
ராம் சரணின் பெத்தி படத்தின் 5வது நாள் வசூல்:
இந்த பெத்தி படத்தில் ராம் சரண் குஸ்தி, கிரிக்கெட் மற்றும் ரன்னிங் போன்ற விளையாட்டில் ஈடுபாடுள்ள நபராக நடித்துள்ளார். இப்படமானது கிட்டத்தட்ட கிராமப்புற கதைக்களத்தில் உருவாகியுள்ள விளையாட்டு டிராமா படமாக தயாராகியுள்ளது. இப்படமானது வெறும் ஐந்து நாட்களிலே உலகளவில் சுமார் ரூ 315 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படமானது வெளியான முதல் னால முடிவிலே ரூ 130 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்ததாக படக்குழு அறிவித்த நிலையில், விமர்சனங்களை கடந்தும் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் சம்பவகாரி நீதாண்டி.. கட்டா குஸ்தி 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!!
பெத்தி திரைப்படத்தின் 5வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
BOX OFFICE CHAMPION #PEDDI continues his dominance 🔥🔥#Peddi collects a gross of over 315 CRORES + GROSS WORLDWIDE in 5 days ❤🔥#PEDDI Now In Cinemas 💥https://t.co/xclVAMz8oI pic.twitter.com/NUmv0V8NIW
— Mythri Movie Makers (@MythriOfficial) June 9, 2026
ராம் சரணின் இந்த பெத்தி படத்திற்கு முக்கிய தூணாக இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என கூறலாம். இவரின் இச்சியில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார். ராம் சரண் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடனமாடிய பாடல் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படமானது ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.