Gatta Kusthi 2: என் சம்பவகாரி நீதாண்டி.. கட்டா குஸ்தி 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!!
Sambavakaari Promo: விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படமானது சிறப்பான ஆக்ஷசன் பேமிலி டிராமாவாக தயாராகியுள்ள நிலையில், சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான, சம்பவகாரி பாடல் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி (Gatta Kusthi) படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் கட்டா குஸ்தி – ரவுண்ட் 2 (Gatta Kusthi – Round 2). இந்த படத்திலும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshm) நடித்துள்ளார். இப்படமானது குஸ்தி போட்டியால் கணவன் மனையிடையே ஏற்பட்ட குழம்பும், சண்டை மற்றும் பேமிலி பேக்ரவுண்ட் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே கட்டா குஸ்தி 2 படமும் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு (Chella Ayyavu) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.
இப்படமானது சிறப்பான கதைக்களத்தில் தயராகியுள்ள நிலையில், இதற்கு இசையமைப்பாளர் சென் ரோல்டன் (Sean Roldan) இசையமைத்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல்களை “சம்பவகாரி” (Sambavakaari) என்ற பாடல் தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்துடன் பாடல் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: என்னால் முடிந்தவரை.. தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்பேன் – அஜித் குமார்!
கட்ட குஸ்தி 2 படத்தின் முதல் பாடல் சம்பவகாரி புரோமோ குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Just a little tease before the real Sambavakaari arrives 😉
A @RSeanRoldan musical sambavam awaits.#GattaKusthi2 First Single – Tomorrow at PM.
Starring @TheVishnuVishal and #AishwaryaLekshmi.
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu in theatres… pic.twitter.com/SAa2CVFtDS
— Vels Film International (@VelsFilmIntl) June 8, 2026
சம்பவகாரி பாடல் ரிலீஸ் எப்போது:
இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைப்பில் மற்றும் அவரின் குரலில் சம்பவகாரி என்ற முதல் பாடல் தயாராகியுள்ளது. இப்பாடலானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 09ம் தேதியில் வெளியாகவுள்ளது. ஜூன் 09ம் தேதியில் மாலை 4:07 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்பாடலின் மீது அதிகம் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க: என்ன ஆனாலும் அம்மா அம்மாதான்.. எமோஷனலான நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
இந்த படமானது குஸ்தி மற்றும் குடும்ப கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது.