Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா ‘குஸ்தி பார்ட் 2’.. புரோமோ வீடியோ இதோ!
Gatta Kusthi Part 2 Promo Video : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் கட்டா குஸ்தி. இந்த படமானது குஸ்தி போட்டியை அடிப்படையாக கொண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக கூறப்பட்டநிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் லால் சலாம் (Lal Salaam) என்ற திரைப்படம் வெளியானது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் (Rajinikanth) இணைந்து இவர் நடித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தனது தயாரிப்பில், ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தின் மூலம் தனது சகோதரர் ருத்ரா என்பவரையும் ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருந்தார். இதில் விஷ்ணு விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர், கட்டா குஸ்தி 2 (Gatta Kushthi Part 2) படமானது உருவாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது படக்குழு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த கட்டா குஸ்தி பாகம் 2-ன் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.




இதையும் படிங்க : இன்று மாலை வெளியாகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குறித்த முக்கிய அப்டேட்
கட்டா குஸ்தி 2 படம் குறித்து வெளியான ப்ரோமோ வீடியோ பதிவு :
Second Round Begins 🥊🔔 @VelsFilmIntl & @VVStudioZ proudly announce#GattaKusthi2 ❤️🔥
Announcement Promo ▶️https://t.co/KyUAeQFLMzA film by @ChellaAyyavu 💥
An @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal @AishuL_ @kushmithaganesh @nitinsathyaa #Karunaas… pic.twitter.com/RJ9QPhRsmZ— Vels Film International (@VelsFilmIntl) September 1, 2025
கட்டா குஸ்தி பார்ட் 2 படம் :
இந்த கட்டா குஸ்தி பார்ட் 2 திரைப்படத்தையும் இயக்குநர் செல்ல அய்யாவு இயக்க, விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து, தமிழ் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடிகர்கள் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் இணைந்து நடிக்கவுள்ளனர்.
மேலும் இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளார் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
கட்டா குஸ்தி
கடந்த 2022ம் ஆனது வெளியான கட்டா குஸ்தி படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் ரவி தேஜா புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படமானது வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
இதையும் படிங்க : டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்
இந்த படமானது காதல், குடும்பம் மற்றும் குஸ்தி போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பாகம் 2 படமும் தயாராகவுள்ளது.