Madharaasi : சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ‘மதராஸி’ படத்தின் முன்பதிவு தொடக்கம்!
Madharaasi Ticket Booking Update : சிவகார்த்திகேயன் நடிப்பில் 23வது படமாக உருவாகியிருக்கும் படம் மதராஸி. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக டிக்கெட் புக்கிங் எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் நடிகை ருக்மிணி வசந்தின் (Rukmini Vasanth) கூட்டணியில் உருவாகியுள்ள படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் SK&ARM என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் தயாரிப்பில் வெளியான மான் கராத்தே படத்தை அடுத்ததாக, இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.
இந்த மதராஸி படமானது வரும் 2025 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகாவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2025 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மதராஸி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க : ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ பட ரிலீஸ் மாற்றம்.. புதிய ரிலீஸ் தேதி இதோ!
டிக்கெட் முன்பதிவு குறித்து மதராஸி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
The wait for the biggest action entertainer almost ends 💥💥#Madharaasi Tamil Nadu bookings now open!
Book your tickets on the @district_india app – the official ticketing partner.🔗 https://t.co/tqVhjib0Va#Madharaasi grand release worldwide on September 5th.… pic.twitter.com/qK2gVVuZ0K
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 1, 2025
இந்த மதராஸி படத்தின் டிக்கெட் புக்கிங் வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்னே தொடங்கிய நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவில் தற்போது அதிகம் வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமரன் வசூலை முந்துமா மதராஸி ?
நடிகர் சிவகார்திகேயனின் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் படமானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். இதனையடுத்து மதராஸி படத்திலும் நடித்துவந்த நிலையில், இந்த மதராஸி மீதும் அதிகம் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அமரன் படமானது மொத்தமாக உலகளவில் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இதையும் படிங்க : டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்
அதை அடுத்ததாக , மதராஸி படமும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில், இப்படமும் அதிகம் வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான பிறகுதான் எது உண்மை என்பது தெளிவாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.