Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Blackmail : ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ பட ரிலீஸ் மாற்றம்.. புதிய ரிலீஸ் தேதி இதோ!

Blackmail Movie New Release Date: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் வெளியாகவேண்டிய படம் பிளாக்மெயில். சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Blackmail : ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ பட ரிலீஸ் மாற்றம்.. புதிய ரிலீஸ் தேதி இதோ!
பிளாக்மெயில் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Sep 2025 15:31 PM

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் (GV.Prakash Kumar) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக  பேண்டஸி கதைக்களத்துடன் வெளியான திரைப்படம்தான் கிங்ஸ்டன் (Kingston). இந்த படமானது கடந்த 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியானது. இந்த படமானது ஆரம்பத்தில் பாசிடிவ் விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்தடுத்த புதிய படங்கள் உருவாகிவருகிறது. அதில் ஒன்றுதான் பிளாக்மெயில் (Blackmail). இந்த படத்தை இயக்குநர் மு. மாறன் (Mu. Maaran) இயக்கியுள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் கடந்த 2025 ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகயுள்ளதாம். தற்போது இந்த தகவலானது இணையத்தியல் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நடிகர் சூர்யாவிற்கு நாயகியாகும் பிரபல மலையாள நடிகை?

பிளாக்மெயில் படத்தின் ரிலீஸ் குறித்து ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவு :

இந்த பிளாக்மெயில் படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்க, ஜே.டி.எஸ். பிலிம் பேக்டரி நிறுவனமானது தயாரித்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனதாகவும்,  நடிகர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நடிப்பதற்கு வாங்கிய தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்த நிலையில் படம் தற்போது ரிலீஸிற்கு தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கட்டா குஸ்தி ரவுண்ட் 2 திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ ரிலீஸ் அப்டேட் இதோ!

இது குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரே நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும் ஷாஜி சென், கிரிஜா ஹரி, பிந்து மாதவி, ஹரி ப்ரியா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து படங்களில் நடித்துள்ளனர்.

பிளாக்மெயில் படத்தின் கதைக்களம் :

இந்த படமானது முற்றிலும் கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸின் போதுதான், நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இரு படங்களுக்கும் மத்தியில் பாக்ஸ் ஆபிசில் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.