நடிகர் சூர்யாவிற்கு நாயகியாகும் பிரபல மலையாள நடிகை?
Actor Suriya: நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 47-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியானது.
அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி உடனான சூர்யாவின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். சூர்யாவின் 46-வது படமான இதில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் முன்னதாக வெளியான லக்கி பாஸ்கர் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இதன் காரணமாகவே சூர்யா – வெங்கி அட்லூரியின் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.




சூர்யாவின் 47-வது படத்தில் நாயகியகா நடிக்கும் நஸ்ரியா நஸீம்:
இந்த இரண்டு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குநராக இருக்கும் ஜீத்து மாதவன் சூர்யாவின் 47-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்த தகவல்களும் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்தப் படத்தில் நடிகை நஸ்ரியா நஸீம் நாயகியாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்
நடிகை நஸ்ரிய நஸீமின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram