Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – சத்யராஜ் கொடுத்த விளக்கம்!

Actor Sathyaraj: தமிழ் சினிமாவில் பல கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் சத்யராஜ். இவர் ஏற்காத கதாப்பாத்திரமே இல்லை என்பது போல அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க மறுத்ததற்கு என்ன காரணம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – சத்யராஜ் கொடுத்த விளக்கம்!
ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2025 20:43 PM

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் (Actor Sathyaraj) நடிகர் ரஜினிகாந்தின் உயிர் தோழனாக நடித்து இருந்தார். படத்தில் இவர்களின் நட்பு ரசிகர்களிடையே அதிகப் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடிப்பெற்றபோது நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அப்போது நடிகர் சத்யராஜ் முன்னதாக ஒரு படத்தில் எனக்கு எதிர் கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டபோது அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னுடைய சம்பளமே அவருக்கு வழங்குவதாக தெரிவித்த போதும் சத்யராஜ் அந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் சில விசயங்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த் எங்கள் இருவருக்கும் கருத்து ரீதியாக வித்யாசம் இருந்த போதிலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

ஏன் என்றால் எதையும் நேரடியாக பேசக்கூடிய மனிதர் சத்யராஜ். அவருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலான பிறகு பல கருத்துகள் இணையத்தில் வெளியானது. பலரும் பலவிதமான விசயங்களை பேசினர். எது உண்மை என்று தெரியாமல் இருந்த நிலையில் இந்த அனைத்து கேள்விகளுக்கும் நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சத்யராஜ் சொன்ன விசயம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, சிவாஜி படத்தில் தான் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க கேட்டனர். அப்போது எனது மார்கெட் தொடர்ந்து சரிந்துகொண்டு இருந்த நேரம். நாயகனாக ஒரு படமாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்தே.

அந்த நேரத்தில் வில்லனாக அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் இயக்குநர் சங்கரிடம் கூறினேன். சார் நான் இப்போ ரொம்ப சிரமபட்டுட்டு இருக்கேன் நாயகனாக ஹிட் கொடுக்க அதனால் என்னால் இந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியாது என்று தெரிவித்தேன். அதனால் தான் அந்தப் படத்தில் நடிக்க மறுத்தேன் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!

கூலி படத்தின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு இதோ:

Also Read… நெட்ஃபிளிக்ஸில் ஸ்கேட்டர் கேர்ள் என்ற ஸ்போர்ஸ் படத்தை பார்க்காமல் தவறவிடாதீர்கள்