Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!

Speak Eazy of Bro Code | நடிகர் ரவி மோகன் தற்போது சினிமாவில் புது அவதாரத்தை எடுத்துள்ளார். அதன்படி அவர் தயாரிப்பு நிறுவனம் முதலவதாக தயாரித்துள்ள படம் ப்ரோ கோட். இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ளார்.

ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!
ப்ரோ கோட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2025 19:30 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). சுமார்22 வருடங்களாக நடிகராக இருக்கும் ரவி மோகன் சினிமாவில் அடுத்தடுத்த அவதாரங்களை எடுக்க தயாராகி உள்ளார். அதன்படி நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். நேற்று 26-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு நடிகர் ரவி மோகனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது.

காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு தொடர்ந்து கராத்தே பாபு, ஜீனி மற்றும் பராசக்தி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரவி மோகன் தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக ப்ரோ கோட் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவை தற்போது நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ப்ரோ கோட் படம்:

அதன்படி நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த ப்ரோ கோட் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி எழுதி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கௌரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவை நடிகர் ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் ப்ரோமோ வீடியோவைப் பார்க்கும் போது 3 திருமணமான ஜோடிகளின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்பது தெரிகிறது. முழுக்க முழுக்க காமெடி செண்டிமெண்டை வைத்து உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது.

Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!