லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!
Love Insurance Kompany First Punch | இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நாயகனாக நடித்த போடா போடி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Director Vignesh shivan). இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகை வரலட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகம் ஆனார். விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இளம் ஜோடிகளின் திருமண வாழ்க்கை குறித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்த பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக கடந்த 2015-ம் ஆண்டு நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான சைமா விருதையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பெற்றார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்ட நபராக மாறினார் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேந்த கூட்டம், பாவக்கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது 2040-ல் நடக்கும் ஒரு காதல் கதை – lik படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ:
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் லவ் இசூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன், ஷா ரா, மாளவிகா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு முதல் பஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மதராஸி படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய 3 BHK பட நாயகி!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Welcome To The Future ♥️ #LIK #LoveInsuranceKompany#FirstPunch out now ⚡🪐https://t.co/RAasxRETI8
A Love Festival This Diwali 🚀#LIKFromOct17 #LIKdiwaliStarring the sensational @pradeeponelife
An @anirudhofficial Musical
A #Wikki Original#VigneshShivan… pic.twitter.com/a2KQxQC1cE
— Seven Screen Studio (@7screenstudio) August 27, 2025
Also Read… பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!