சோனு டூ சாந்தனு… ஹேப்பி பர்த்டே சாந்தனு பாக்யராஜ்!
Actor Shanthanu Bhagyaraj: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் சாந்தனு பாக்யராஜ். இந்த நிலையில் இன்று நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

பிரபல இயக்குநர், நடிகர் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு (Shanthanu Bhagyaraj) கடந்த 1998-ம் ஆண்டு வெளியான வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் சோனு என்ற கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து இருந்ததால் இவரை பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் சோனு என்று செல்லமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் கலா பிரபு எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து ப்ளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிறப்புக, முபரிமாணம், வாணம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசடதபர, முருங்ககாய் சிப்ஸ், ராவண கூட்டம், ப்ளூ ஸ்டார் என பலப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.




இரண்டாம் நடிகராக ஹிட் கொடுக்கும் சாந்தனு:
நாயகனாக நடிகர் சாந்தனு நடித்தப் படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்ற நிலையில் அவர் இரண்டாம் நாயகனாக நடித்தப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி தமிழில் அவர் நடித்த ப்ளூ ஸ்டார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் ஷேன் நிகாம் நாயகனாக நடிக்கும் பல்டி படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சாந்தனுவின் அறிமுக போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்டி படக்குழு போஸ்ட் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
Also Read… திருமணத்தை ஒத்திவைப்பதாக சொன்ன பிக் பாஸ் ரித்விகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
சாந்தனுவிற்கு பல்டி படக்குழு வெளியிட்ட பர்த்டே போஸ்டர்:
Humbled by this gesture from my #Balti team for my birthday ❤️
This film is going to be a very special chapter in my journey…
Can’t wait to bring it to you all 💥
September 26th it is ❤️🎉@baltimovie @thinkmusicindia @proyuvraaj @SanthoshTKuruv1 @binugeorgealex… pic.twitter.com/oa7hIWrLmH— Shanthnu (@imKBRshanthnu) August 24, 2025
Also Read… என்னுடைய முதல் விமர்சகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்