திருமணத்தை ஒத்திவைப்பதாக சொன்ன பிக் பாஸ் ரித்விகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
Bigg Boss Riythvika: நடிகை ரித்விகா சமீபத்தில் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே இன்ப அதிர்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் திருமணம் குறித்த தேதியில் நடைபெறாது என்று நடிகை ரித்விகா கூறியதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் கருத்தகன்னி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ரித்விகா (Actress Riythvika). இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் படத்திலேயே பாலாவின் இயக்கத்தில் நடித்ததால் அடுத்தடுத்து சிறந்த கதாப்பாத்திரங்கள் நடிகை ரித்விகாவிற்கு வந்தது. அதன்படி அடுத்ததாக 2014-ம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ரித்விகா நடித்து இருந்தார். இதில் நடிகர் கலையரசனின் மனைவியாக ரித்விகா நடித்து இருந்தார். நாயகன் நாயகிக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளைப் போலவே இவர்களுக்கும் கொடுத்து இருந்தார் இயக்குநர். இதன் காரணமாகவே இந்தப் படத்தில் இவரது காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகை ரித்விகா நடிப்பில் வெளியான அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒரு நாள் கூத்து, கபாலி, எனக்கு வேறு எங்கும் கிழைகள் கிடையாது, இருமுகன் எனப் பலப் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
நடிகை ரித்விகாவின் திருமணம் ஒத்திவைப்பு?
இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ரித்விகா இறுதியாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தில் நடித்து இருந்தார். மருத்துவராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ரித்விகா. தொடர்ந்து படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ரித்விகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு வருகின்ற 27-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் சில எதிர்பாராதா சூழ்நிலை காரணமாக அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக பத்திரிகை கொடுத்தவர்களுக்கு அவர் தெரிவித்ததாக செய்திகள் பரவி வருகின்றது. இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஐயா எப்படியாவது இத ஹிட் படமா கொடுங்கனு விஜய் சேதுபதி சொன்னார்… தலைவன் தலைவி இயக்குநர் சொன்ன விசயம்!
நடிகை ரித்விகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram