AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டு உரிமையாளர்களே இதெற்கெல்லாம் No.. 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள் கூறுவது என்ன?

Rental Rules For 2026 | ஒவ்வொரு ஆண்டும் வீட்டு வாடகை விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்யும். அந்த வகையில் தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டு உரிமையாளர்களே இதெற்கெல்லாம் No.. 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Mar 2026 15:06 PM IST

சென்னை (Chennai), பெங்களூரு (Bengaluru) போன்ற பெரிய நகரங்களில் சொந்த வீட்டில் இருப்பவர்களை விடவும் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். கல்வி, வேலை, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரும் தங்களது சொந்த ஊர்களை விட்டுவிட்டு சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். வாடகை வீடுகளில் வசிப்பதே ஒரு சவால் என்றால் வீட்டு உரிமையாளர்களின் விதிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். இந்த நிலையில், தான் வாடகைக்கு இருக்கும் நபர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், வீட்டு உரிமையாளர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்ற புதிய விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள்

வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள் ஆகிய இருவருக்குமே சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வாய் வழி ஒப்பந்தங்களுக்கு இடமில்லை

புதிய விதிகளின்படி, இனி வழக்கமான வாய்வழி ஒப்பந்தங்களுக்கு இடமில்லை. ஒவ்வொரு வாடகை ஒப்பந்தமும் கையெழுத்தான 60 நாட்களுக்குள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் போலியான ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்கள் ஆகியவற்றை தடுக்க முடியும். ஒருவேளை ஒப்பந்தங்களை 60 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆதார் கார்டில் பெயர், முகவரியை திருத்த நிபந்தனை.. UIDAI கூறுவது என்ன?

பெரிய தொகையை அட்வான்ஸாக கேட்க முடியாது

சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. பல உரிமையாளர்கள் 10 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கான வாடகையை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும் என கேட்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த நிலையில் தான், இனி அட்வான்ஸாக 2 மாதங்களுக்கான வீட்டு வாடகை, வணிக ரீதியான பயன்பாடு என்றால் 6 மாதங்களுக்கான வாடகையை மட்டுமே பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இனி இஷ்டத்திற்கும் வாடகை உயர்த்த முடியாது

சில உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு வாடகையை உயர்த்துவார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இனி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும் என்றும், வாடகையை உயர்த்துவதற்கு 90 நாட்கள் முன்னதாகவே அது குறித்து வாடகைதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இனி முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வீட்டின் உரிமையாளர் மின்சாரம் அல்லது தண்ணீரை துண்டிப்பது, வாடகதாரரை வெளியேற்றுவது, சட்டபூர்வ உத்தரவின்றி வீட்டை பூட்டுவது உள்ளிட்ட செயல்களை செய்ய கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை வீட்டு உரிமையாளர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போர் நெருக்கடி.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வருமா?

வாடகைதாரர்கள் வாடகை தராமல் இருப்பது, சொத்துக்கு சேதம் விளைவிப்பது அல்லது ஒப்பந்த விதிகளை மீறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உரிமையாளர்கள் தீர்ப்பாயம் மூலம் சட்டப்பூர்வமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us