AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் ரூ.14,000-த்தை நெருங்கிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Gold and Silver Price In Chennai On August 08, 2026 | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் ரூ.14,000-த்தை நெருங்கிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Aug 2026 10:35 AM IST

சென்னை, ஆகஸ்ட் 08 : கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) சரசரவென விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 08, 2026) தங்கம் விலை மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சரசரவென உயர்வை சந்தித்து வரும் தங்கம் விலை இ

ஜுன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரசரவென விலை உயர்ந்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க : EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

அதுமட்டுமன்றி, ஹோர்முஸ் நீரிணையும் விரைவில் திறந்துவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீட்டான தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தான் ரூ.13,000-க்குள்ளேயே நீடித்து வந்த தங்கம் விலை தற்போது ரூ.14,000-த்தை நெருங்கியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 08, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us