AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : 2 ஆண்டுகள் கெரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

What Happen To Your PF Account During Career Break | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களுக்கு பண வரவு வைக்கப்பட்டு அதற்கான வட்டியும் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், கெரியர் பிரேக் எடுத்தால் பிஎஃப் பணம் என்னவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.

EPFO : 2 ஆண்டுகள் கெரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 15:02 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வாழ்வாதாரமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) இயங்கி வருகிறது. ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யும் இபிஎஃப்ஓ, அதனை ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கி வரவு வைக்கிறது. இந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் சில தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊழியர்கள் இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து விலகி இருந்தால் அவர்களது பிஎஃப் (PF – Provident Fund) பணம் என்னவாகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு ஆண்டுகள் கெரியர் கேப் பிஎஃப் பணத்தை என்ன செய்யும்?

பிஎஃப் பணம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், அதற்காக வட்டியும் வழங்கப்படும். இந்த நிலையில், ஒருவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து விலகி இருந்தால் பிஎஃப் பணத்திற்கு என்ன ஆகும், கணக்கில் இருக்கும் பிஎஃப் பணத்திற்கு வட்டி வருமா என்பதெல்லாம் பலருக்கும் கேள்வியாக உள்ளது. ஆனால், ஊழியர்கள் கவலைக்கொள்ளும் வகையில் கெரியர் பிரேக் எடுத்தால் பிஎஃப் கணக்கிற்கும், அதில் இருக்கும் பணத்திற்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

இதையும் படிங்க : Gold : இரண்டு நாட்களில் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்த தங்கம்.. திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

எந்த பங்களிப்பும் செய்யப்படாது

நீங்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் உங்களது பிஎஃப் பணத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் உங்கள், பிஎஃப் கணக்கிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது. ஆனால், உங்கள் பிஎஃப் கணக்கில் எந்தவித பங்களிப்பும் மேற்கொள்ளப்படாது என்பதையும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : வங்கி கடனை Pre Close செய்தால் Credit Score உயருமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்படும்

இபிஎஃப்ஓ விதிகளின்படி, ஒருவர் பணியில் இருந்து இடை நின்றாலும் தொடர்ந்து அந்த நபருக்கு வட்டி வழங்கப்பட்டு வரும். எனவே நீங்கள் இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து பிரேக் எடுத்தாலும், உங்களுக்கு உங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி வழங்கப்படும்.

Follow Us