பெண்களுக்கு தற்காப்புகலை ரொம்ப முக்கியம்… விஸ்மயா மோகன்லாலின் துடக்கம் படத்தின் ஓடிடி விமர்சனம் இதோ!
Thudakkam Movie OTT Review | மலையாள சினிமாவில் விஸ்மயா மோகன்லால் நாயகியாக அறிமுகம் ஆன படம் துடக்கம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது வாரிசாக முதலில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லாலும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மலையால சினிமாவில் வெளியான துடக்கம் என்ற படத்தின் மூலமாக இவர் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 07-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் விஸ்வமயா நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மோகன்லால் கேமியோ செய்துள்ளார். மேலும் நடிகர்கள் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, பாபி குரியன், சாய் குமார், மனோஜ் கே. ஜெயன், கே.பி.கணேஷ் குமார், சிப்பி ரஞ்சித், கோட்டயம் ரமேஷ், ஜெய குருப், எஸ்சா மரியா எடிசன், ஜாபர் இடுக்கி, டி.ஜி.ரவி, மியா ஜார்ஜ், ஜிபின் கோபிநாத், ஆதித்ய லட்சுமி, ரேஷ்மி போபன், ஜெய்ஸ் ஜோஸ், சிஜாய் வர்கீஸ், தினேஷ் பிரபாகர், பாலி வல்சன், பிரேம் பிரகாஷ், லாலி மரக்கார், ஜெயக்குமார் பரமேஸ்வரன் பிள்ளை, நில்ஜா கே பேபி, சிவதாஸ் கண்ணூர், கிலு ஜோஸ், அஸ்வின் விஜயன், ஷானவாஸ் ஷானு, துஷாரா பிள்ளை, விஜய்குமார் பிரபாகரன், ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் நடித்து உள்ளனர்.
விஸ்மயா மோகன்லாலின் துடக்கம் படத்தின் கதை என்ன?
உடல் ஊனமுற்ற அப்பா உடன் வாழ்ந்து வருகிறார் நடிகை விஸ்மயா. இவர் அந்த ஊரில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் தற்காப்பு கலை கற்றுத்தருகிறார். இப்படி இருக்கு நிலையில் வெளியில் சென்ற இடத்தில் இரண்டு பள்ளி செல்லும் பெண்களை ஒருவர் பின் தொடர்வதைப் பார்த்து அந்த பெண்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுகிறார். அப்போதும் அந்த நபர் விஸ்மயாவை பின் தொடர்கிறான். அப்படி பின் தொடரும் அந்த நபர் பல குற்றச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளி ஆவார்.




Also Read… அக்கா அம்பிகா மீது மோசடி புகார் அளித்த நடிகை ராதா – என்ன நடந்தது?
இவர் விஸ்மயாவின் வீட்டிற்கே சென்று அவரை தாக்க முயற்சிக்கிறார். அப்போது விஸ்மயா தற்காப்பு கலை தெரிந்து இருந்ததால் அவரை எதிர்த்து போராடுகிறார். இறுதியில் விஸ்மயாவால் முடியாத போது அவரது நாய் அந்த வில்லனை கடித்து துறத்துகிறது. இதனால் விஸ்மயா மீது கோபத்தில் இருக்கும் அந்த வில்லன் மீண்டு அவரை தாக்க முயற்சிக்கும் போது அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தப் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
Also Read… பிக்பாஸில் சாப்பாட்டு விசயத்தில் அன்சர் மற்றும் சாதிகா இடையே சலசலப்பு – என்ன செய்வார் லீடர்