பரோட்டா சூரி என்பது இல்லவே இல்ல.. என் பேரு சூரி மட்டும்தான் – விளக்கமளித்த சூரி!
Soori About Nick Name: தமிழில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்து, தற்போது சினிமாவில் படங்களின் நாயகனாக நடித்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் மண்டாடி என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. தனக்கு பரோட்டா சூரி என அழைக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் சூரியின் (Soori) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான பிரம்மாண்ட திரைப்படம் மண்டாடி (Mandaadi). அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் (Mathimaran pugazhendhi) இயக்கத்தில் உருவான இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது. இந்த படத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். அதிரடி கடல் சாகசம் மற்றும் கப்பல் போட்டியை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூரி லீட் நாயகனாக நடிக்க, அவருடன் சத்யராஜும் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகி இதுவரை மொத்தமாக ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இந்த படமானது தற்போதும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், இன்னும் விரைவில் ரூ 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மண்டாடி படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர், அதில் பேசிய அவர் தனது அடைமொழியான “பரோட்டா சூரி” என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை, மக்கள்தான் என்னை அவ்வாறு அழைத்தார்கள் என அது பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இந்த ஆள பழிவாங்கனும் ஒருநாள் நினைத்தேன்… ஷாருக்கானை பற்றி நினைத்தேன் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி!
பரோட்டா சூரி என்ற அடைமொழி பற்றி பேசிய நடிகர் சூரி:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி, அதில் “பரோட்டா சூரி என்ற பெயர் இல்லவே இல்லை. சூரி என்பதுதான் எனது பெயர். அப்படிதான் படங்களிலும் வரும். ஜனங்கள் தான என்னை அப்படி அழைத்தார்கள். படத்தில் சூரி என மட்டும்தான் இருக்கும். இன்று ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து, கதை நாயகனாக மாறி தற்போது கதாநாயகனாக மாறியது எல்லாமே உங்களின் ஆதரவால்தான்.
இதையும் படிங்க: பிக் பாஸில் இந்த வாரத்தில் வெளியேறும் நபர் யார்? வெளியான புரோமோ!
என்னை மக்கள்தான் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் என்னை நிறுத்தியுள்ளார்கள். அதற்காக மக்களுக்குத்தான் எனது நன்றியை சொல்லுவேன் என கூறினார். மேலும் மண்டாடி படத்தின் ஷூட்டிங்கில் தனக்கு பட்ட அடிகள் மற்றும் காயங்கள்” குறித்தும் கலகலப்பாக பேசியிருந்தார்.
மண்டாடி திரைப்படம் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Mandaadi Reaches Yet Another Milestone! 🔥#Mandaadi Grosses ₹80+ Crores Worldwide! 💥
The Reign Continues! ⛵⚓💥#Mandaadi is Running Successfully in theatres near you! 💥
#Suhas #Sathyaraj @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5@bala_actor @Kritika_Bala@elredkumar… pic.twitter.com/pQYYQ0inSZ
— Actor Soori (@sooriofficial) September 18, 2026
இப்படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றியாகிவரும் நிலையில், அக்டோபர் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.