Soori: சூரி எப்டி எப்டி.. மண்டாடி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து பகிர்ந்த சூரி!
Rajinikanth Praises Mandaadi Movie: நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மண்டாடி. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சக்ஸஸ் மீட் இன்று (17/09/2026) நடைபெற்றிருந்தது. அதில் பேசிய சூரி, மண்டாடி திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டிய விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூரி (Soori). ஆரம்பத்தில் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் திரைப்படங்களில் நடித்துவந்தார். பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக நுழைந்தார். இதற்கு பின் கருடன், விடுதலை 2 மற்றும் மாமன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களை கவர்ந்தார். இவர் ஹீரோவாக நடித்த மாமன் படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதன் பின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில், சூரி நடித்திருந்த புதிய படம்தான் மண்டாடி (Mandaadi). இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியிருந்தது.
அந்த விதத்தில் இப்படத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டிருந்தது. அதில் பேசிய சூரி, மண்டாடி திரைப்படத்தை பார்த்து ரஜினிகாந்த் (Rajinikanth) வாழ்த்திய விஷயம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: அடுக்கடுக்காக டாஸ்க் கொடுத்த வினோத் பாபு.. அதிரடியாக மிரட்டிய மணிவண்ணன்.. பரபரப்பில் பிக் பாஸ்!
மண்டாடி திரைப்படத்தை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டிய விஷயம் குறித்து பகிர்ந்த சூரி:
மண்டாடி பட சக்ஸஸ் மீட் இன்று (17/09/2026) நடைபெற்றிருந்த நிலையில், அதில் சூரி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், சூரி, எப்படி எப்படி எப்படி இதெல்லாம், ரொம்ப நல்ல இருக்கே. ரொம்ப நல்ல இருந்துகை. நான் படம் ஃ புள்ள இருந்து பாத்துட்டே இருந்தேன். எந்திரிக்கவே இல்ல, அவ்வல்;அவு சூப்பராக இருந்தது. படக்குழு முவதுக்கும் எனது வாழ்த்தை சொல்லுங்க.ஆகஸ்ட் காட்சிகளில் பீட்டர் ஹெய்ன் தானா?, அவரு என்னையும் இப்படித்தான் பண்ணாரு.
இதையும் படிங்க: துருவ் விக்ரமின் ஜாக்கி.. ‘First Move’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
பீட்டர் மாஸ்டர் பென்ட நிமித்திட்டாரா உங்களையே.. பெண்டாஸ்டிக் ஒர்க்… என ரஜினிகாந்த் சார் சொன்னாரு.. தலைவரே இதை விடவும் எங்களுக்கு வேறெந்த விஷயமும் வேண்டாம். விடுதலை படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பாராட்டை பெற்றேன், அதிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மண்டடை படத்திற்காக பெற்றிருக்கிறேன்” என அதில் சூரி நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
மண்டாடி திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து பற்றி பேசிய சூரி வீடியோ:
#Soori about Superstar #Rajinikanth‘s call 🔥:
“Soori.. Epdi Epdi Epdi idhellam.. Romba Nalla irunchu ah.. Na full ah ukandhu pathute irundhen.. Endhrikave ila.. Entire Team ku Ennoda Vaazhtha sollirunga.. Peter hein Master Namlayum ipdi dhan Bend ah nimithitaru.. Ungalayum bend…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 17, 2026
மண்டடை திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தற்போதுவரையிலும் கிட்டத்தட்ட ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும் இப்படமானது விரைவில் ரூ 100 கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.