AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி? அடுத்தப் படத்திற்கு இத்தனை கோடிகளா – வைரலாகும் தகவல்

Actor Soori Salary Details Viral On Social Media | தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் அவரின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி? அடுத்தப் படத்திற்கு இத்தனை கோடிகளா – வைரலாகும் தகவல்
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Sep 2026 17:51 PM IST

தென்னிந்திய மொழிகளில் காமெடி நடிகர்களாக பலப் படங்களில் நடித்தவர்கள் தொடர்ந்து நாயகன் அவதாரம் எடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதிலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக கலக்கி வந்த நடிகர்கள் தொடர்ந்து தற்போது நாயகனாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர்கள் சந்தானம், யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் வரிசையாக படங்களில் நாயகனாக நடித்து வருகின்றனர். இதில் சூரி மட்டுமே நாயகன் மற்றும் காமெடியன் என இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி இருவரும் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகின்றனர். அதிலும் நடிகர் சூரி தற்போது தொடர்ந்து நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் சூரியின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படத்தினை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி?

சூரியின் அடுத்த படத்திற்கான சம்பளம் மட்டுமே ரூ. 25 கோடி என்று கூறப்படுகிறது. சென்னை வெள்ளப் பின்னணியில் நகர்ப்புறம் சார்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூரி இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலான அடுத்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 50 கோடி எனத் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாதையில் பயணித்து வருகிறார். அவரது சமீபத்திய படமான மண்டாட்டி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன், வெளியான முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… தெய்வீக சக்தி விழித்தெழுவதைக் காணுங்கள்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் – நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய கார் ரேஸ் வர்ணனையாளர்

Follow Us