AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தெய்வீக சக்தி விழித்தெழுவதைக் காணுங்கள்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

Mookuthi Amman 2 Movie Update: கோலிவுட் சினிமாவில் ஹாரர் மற்றும் தெய்வீகம் நிறைந்த திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் சுந்தர் சி. இவர் நயன்தாரா, ரெஜினா, சினேகா போன்ற நடிகைகளை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கியுள்ள நிலையில், இதன் முக்கிய அப்டேட் குறித்த பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.

தெய்வீக சக்தி விழித்தெழுவதைக் காணுங்கள்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2026 20:51 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்துவபருப்பவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தி மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் மட்டும் அதுவும் ஒரே வாரத்தில் இவரின் நடிப்பில் இரு படங்கள் வெளியானது. யாஷுடன் (Yash) டாக்ஸிக் (Toxic) திரைப்படமும், கவினுடன் நடித்த ஹாய் (Hi) திரைப்படமும். இந்த இரு படங்களிலும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பிறகு புதிய திரைப்படங்களிலும் நயன்தாரா ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் முதல் முறையாக சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள படம்தான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2).

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய 5 மாதங்களில் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: மண்டாடி மாபெரும் ஹிட்… கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கிய படக்குழு!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய அப்டேட்:

இந்த பதிவில் படக்குழு, “ரைஸ் ஆப் மகாசக்தி” என்ற முக்கியமான அப்டேட் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காலை 10 மணியளவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது இப்படத்தின் அறிமுக வீடியோவை போல அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரித்துவருகிறார். இதில் நயன்தாரா லீட் நாயகியாக நடிக்க, அவருடன் ரெஜினா, சினேகா, குஷ்பூ, அபிநயா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் சுனில் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆரமிக்கலாமா?.. முடிச்சிரலாமா..! கானா இசையில் கதையில்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர் வெளியீடு!

இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இப்படத்தின் முக்கிய அறிவிப்புடன் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us