AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mandaadi: மண்டாடி மாபெரும் ஹிட்… கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கிய படக்குழு!

Sooris Mandaadi Film: தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக படங்களில் ஹிட் கொடுத்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் மண்டாடி திரைப்படமானது சமீபத்தில் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனால் படக்குழு கூடுதல் 500 திரைகளை ஒதுக்கியுள்ளது.

Mandaadi: மண்டாடி மாபெரும் ஹிட்… கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கிய படக்குழு!
மண்டாடி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2026 17:05 PM IST

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் (Mathimaran Pugazhendhi) இயக்கத்தில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் வெளியான திரைப்படம் மண்டாடி (Mandaadi). இதில் சூரி (Soori) ஹீரோவாக நடிக்க, அதிரடி ஆக்ஷன் மற்றும் படகுப் போட்டியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, வில்லனாக தெலுங்கு நகைச்சுவ்வை நடிகர் சுஹாஸ் (Suhas) நடித்துள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் மகிமா நம்பியார், சத்யராஜ், பலா சரவணன் மற்றும் மிதுன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடல் சார்ந்த மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க, ஆர்.எஸ்.இன்போடைமென்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படமானது சூரியின் முதல் அதிரடி ஆக்ஷன் மற்றும் படகுப் போட்டி சார்ந்த படமாகும். இதை சூரி, தனது சினிமா வாழ்க்கையில் இதுவரை வெளியான படங்களில் சிறப்பான படம் என புரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்த படத்திற்கு தற்போது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு இருந்துவரும் நிலையில், தற்போது படக்குழு கூடுதலாக 500 திரைகளை ஒதுக்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: துருவ் விக்ரமின் 4வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!

மண்டாடி திரைப்படத்திற்காக 500 திரைகளை ஒதுக்கியது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரம்:

நடிகர் சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். இதை வெற்றிமாறன் இயக்கிய நிலையில், இதையடுத்து தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான மாமன் படம் கிட்டத்தட்ட ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. தனது நடிப்பில் வித்தியாசமான மற்றும் எமோஷனலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார் சூரி.

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி? நடிகை யோகலட்சுமி ஓபன் டாக்

அந்த விதத்தில் இவரின் மண்டாடி படத்திற்கும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளிலே சுமார் ரூ 6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த நிலையில், கஇதுவரை கிட்டத்தட்ட 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துவருகிறது. மேலும் வார இறுதி மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு மற்றும் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us