AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mandaadi: படகுப் பந்தயக் காட்சிகளுடன்… வெளியானது சூரியின் மண்டாடி படத்தின் ட்ரெய்லர்!

Mandaadi Trailer: கோலிவுட் சினிமாவில், நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவர் சூரி. இவர் ஹீரோவாக நடிக்க, தமிழில் உருவாகியுள்ள புத்தம் புதிய திரைப்படம்தான் மண்டாடி. அதிரடி ஆக்ஷன் மற்றும் படகுப் போட்டி கதைக்களத்தில் இப்படமானது உருவாகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்றுவருகிறது.

Mandaadi: படகுப் பந்தயக் காட்சிகளுடன்… வெளியானது சூரியின் மண்டாடி படத்தின் ட்ரெய்லர்!
மண்டாடி படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Sep 2026 10:50 AM IST

நடிகர் சூரியின் (Soori) நடிப்பில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது. ஆரம்பத்தில் சினிமாவில் எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்த சூரி, பின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை நாயகனாக இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில், இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) விடுதலை 1 படத்தின் மூலமாக சூரி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படமானது வெளியாகி சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் பின் கருடன், மாமன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த்துவந்தார். மேலும் இவரின் நடிப்பில், அதிரடி ஆக்ஷன் மற்றும் படகுப் போட்டியின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் மண்டாடி (Mandaadi).

இதை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்க, ஆர்.எஸ்.இன்போடேன்மெண்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர் – எங்கெல்லாம் தெரியுமா?

மண்டாடி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூரியின் மண்டாடி படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த படமானது அவரது தீவிரம், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்த டிரெய்லர், சுவாரஸ்யமான தருணங்கள், வலுவான உணர்ச்சிகள் மற்றும் நம்பிக்கையூட்டும் காட்சிகளால் நிரம்பியிருப்பதாகத் தெரிகிறது. ஒரு கனவு கோலிவுட் அறிமுகம் காத்திருக்கிறது.

இதையும் படிங்க: வெற்றிமாறனின் பர்த்டே.. ராஜன் வகையறா பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த கென் கருணாஸ்!

எதிர்பார்ப்புகள் நிச்சயமாக அதிகமாக உள்ளன, மேலும் இது சுஹாஸுக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயமாகத் தெரிகிறது. இப்படத்தில் சூரி மற்றும் சுஹாஸுக்கும் இடையேதான் போட்டியே, நடிகை மஹிமா நம்பியார் இதில் சூரியின் மனைவியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சூரியின் மண்டாடி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த மண்டாடி படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அதை முன்னிட்டு இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால இப்படத்தை 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம்.

Follow Us