Kayadu Lohar: இம்மார்ட்டல் பட புரொமோஷனில் பங்கேற்காத சர்ச்சை.. உண்மையை உடைத்த கயாடு லோஹர்!
Kayadu Lohar Breaks Silence: நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் சூர்யா முதல் துல்கர் சல்மான் வரை பல்வேறு நாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இம்மார்ட்டல் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாதது சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில் வெளியான டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக தமிழில் நுழைந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்திருந்த நிலையில், தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் புகழப்பட்டார். இந்த பிரபலத்திற்கு பின், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில், அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்கிறார். இவரின் நடிப்பில் 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இரு படங்கள் வெளியாகிறது.
ஒன்று துல்கர் சல்மானுடன் (Dulquer Salmaan) நடித்த ஐஆம் கேம் (Im Game), மற்றொன்று ஜி.வி. பிரகாஷ் குமாருடன் (GV Prakash Kumar) நடித்த இம்மார்ட்டல் (Immortal). இதில் இவர் ஜி.வி.பிரகாஷின் இம்மார்ட்டல் பட புரோமோஷன்களில் கலந்துகொள்ளாதது சர்ச்சையாகியது. அது குறித்து தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ஐ அம் கேம்… துல்கர் சல்மானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமா? எக்ஸ் விமர்சனம் இதோ!
நடிகை கயாடு லோஹர் பேசியது தொடர்பாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#KayaduLohar about #Immortal Promotion Controversy:
“I don’t know why people have started talking about it.. Because I had that one day available for I’m game promotions.. Immortal team didn’t have that date.. I went to Promotions and Later on i was shooting for a film..✌️
So,… pic.twitter.com/LO7priWPZD
— Laxmi Kanth (@iammoviebuff007) September 3, 2026
இம்மார்ட்டல் பட புரோமோஷன்களில் கலந்துகொள்ளாத சர்ச்சை குறித்து நடிகை கயாடு லோஹர் வெளிப்படையான பேச்சு:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கயாடு லோஹர் அதில், “மக்கள் ஏன் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.. ஏனென்றால், ஐஆம் கேம் புரோமோஷன்களுக்காக எனக்கு அந்த ஒரு நாள் கிடைத்தது. ஆனால் இம்மார்ட்டல் படக்குழுவினரிடம் அந்தத் தேதி இல்லை.. நான் புரோமோஷன்களுக்கு சென்றேன், பின்னர் ஒரு படத்திற்காகப் படப்பிடிப்பில் இருந்தேன். அதனால், என்னால் ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.. இதை நான் யாருக்கும் விளக்க வேண்டியதில்லை என்று உணர்ந்தேன்.
இதையும் படிங்க: சூர்யாவுடன் ஜோடியாக இணையும் டிசி பட நடிகை?.. இயக்குநர் இவரா?
ஏனென்றால், ஐஆம் கேம் புரோமோஷன்களும் நடந்தது, அதற்கும் நான் செல்லவில்லை.. இந்தப் படம் முக்கியம், அந்தப் படம் முக்கியமில்லை என்பது போல அவரவர் சொந்தக் கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். பரவாயில்லை, எனக்கு இது பழகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.