AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார்த்தியின் சர்தார் 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!

Karthis Sardar 2: தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்ஜ்து ஹிட் கொடுப்பவர் கார்த்தி. இவரின் நடிப்பில், தமிழ் சினிமாவில் வெளியாக காத்திருக்கும் புத்தம் புது திரைப்படம்தான் சர்தார் 2. இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

கார்த்தியின் சர்தார் 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!
கார்த்தியின் சர்தார் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2026 12:15 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் வா வாத்தியார் (vaa Vaathiyaar) என்ற திரைப்படமானது வெளியானது. இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது. இந்த படத்திற்கு பின், கார்த்தியின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் படம்தான் சர்தார் 2 (Sardar 2). இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கியுள்ளார்.

இந்த படமானது சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியாக, மெடிக்கல் மாஃபியா தொடர்பான ஜானரில் சர்தார் 2 உருவாகியுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அரசன் 2027 பொங்கலுக்கு இல்லை.. ரிலீஸ் குறித்து சிலம்பரசன் கொடுத்த அப்டேட்!

கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

கார்த்தியின் இந்த சர்தார் 2 படமானது மாஃபியா கதைக்களத்தில், அதிரடி ஆக்ஷன் மற்றும் அதிரடி திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடிக்க, அவருடன் மாளவிகா, மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் போன்ற நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இம்மார்ட்டல் பட புரொமோஷனில் பங்கேற்காத சர்ச்சை.. உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

இப்படம் செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ள நிலையில், 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கார்த்தியின் சர்தார் 2 படமானது அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் 30வது படத்திலும், இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் 31வது படத்திலும் கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படங்கள் 2027ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படுகிறது. மோகன் ராஜாவின் இயக்கத்தில் கார்த்தி இணையும் புது படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2027ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறதாம்.

Follow Us