ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி
Actor Karthi | நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தனது ஜப்பான் படம் சரியாக செல்லவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் 25-வது படமாக திரையரங்குகளில் வெளியான படம் ஜப்பான். இந்தப் படத்தினை இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், விஜய் மில்டன், பாவா செல்லதுரை, ஸ்ரீதர், ராஜேந்திரன், அருண்ராஜா காமராஜ், சி.வி.குமார், சனல் அமன், ராஜேஷ் அகர்வால், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் டிஎஸ்ஆர் சீனிவாசன் என பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் இது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
மாறாக படம் படு தோல்வியை சந்தித்தது. படத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் ரசிகர்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்தில் சர்தார் 2 பட விழாவில் பேசிய போது தனது நடிப்பில் வெளியான ஜப்பான் படம் சரியாக செல்லவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி:
கடந்த 3 ஆண்டுகளாக என் ரசிகர்களை நான் மிகவும் சோதித்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். நான் ஜப்பான் படத்தில் நடித்தேன். அது ஒரு முக்கியமான படம், மேலும் ராஜுமுருகனுடன் பணியாற்றவும் நான் விரும்பினேன். ஆனால், அது நான் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பின்னர் ஆவேஷம் படத்தைப் பார்த்தபோது, ஜப்பான் படமும் அதுபோலவே அமைந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
எந்தவிதமான சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மெய்யழகன் படத்தில் நடித்தேன். நம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றாலும், இந்தப் படத்தை ஒரு கிளாசிக் படைப்பாக உருவாக்கவே நான் விரும்பினேன். நீங்கள் அனைவரும் இப்படத்தைக் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் நலனுடன் பணியாற்ற விரும்பினேன். அவர் தொடர்ந்து பல படங்களை இயக்க வேண்டும். இம்முறை, உங்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. முழு வீச்சில் களம் இறங்கிச் சிறப்பாகச் செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karthi about His Recent Releases:
I know I tortured my fans for the last 3 years. I did #Japan. It was an important film, and I wanted to work with Rajumurugan. But it didn’t go as I expected. Then I watched #Aavesham and realised, Japan should’ve been like this.
I did…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 2, 2026
Also Read… சினிமா ஆசை காட்டி லீலை? இளம்பெண்ணை சீரழிக்க பார்த்த விநியோகஸ்தர்.. சென்னை லாட்ஜில் நடந்த கொடூரம்!