AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சினிமா ஆசை காட்டி லீலை? இளம்பெண்ணை சீரழிக்க பார்த்த விநியோகஸ்தர்.. சென்னை லாட்ஜில் நடந்த கொடூரம்!

Chennai Film Distributor Arrested : சென்னையில் பிரபல ஹோட்டலில் இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக எழுந் த புகாரின் பேரில், சினிமா விநியோகஸ்தரை பாண்டி பஜார் போலீசார் அதிரடியாக கைது செய்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர் .

சினிமா ஆசை காட்டி லீலை? இளம்பெண்ணை சீரழிக்க பார்த்த விநியோகஸ்தர்.. சென்னை லாட்ஜில் நடந்த கொடூரம்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Sep 2026 17:51 PM IST

சென்னை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் ( 38 வயது). இவர், டி. நகர் பகுதியில் உள்ள திருமலை பிள்ளை சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவரை பார்ப்பதற்காக அவரது நண்பர் ஜெய் என்பவர் சம்பவத்தன்று அந்த விடுதிக்கு சென்றுள்ளார். அவருடன் ஒரு இளம் பெண்ணையும் அழைத்து வந்ததாக தெரிகிறது. விடுதி அறையில் அலெக்சாண்டரிடம், அவரது நண்பர் ஜெய் மற்றும் அந்த பெண் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜெய் என்பவர் அந்த பெண்ணை பேசிக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில், திடீரென அந்த இளம் பெண்ணிடம், அலெக்ஸாண்டர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சமூக நலத்துறை -பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தனது தோழியை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியை அடைந்த அவரது தோழி நேரில் அந்த ஹோட்டலுக்கு வந்து அலெக்சாண்டரின் தட்டி கேட்டு உள்ளார். இதில், கடும் ஆத்திரம் அடைந்த அவர் இரு பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், இது தொடர்பாக அந்த இரு பெண்களும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்.. விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த விவசாயி.. திருப்பூரில் சம்பவம்!

சினிமா விநியோகஸ்தர் அதிரடி கைது

அதன் அடிப்படையில், பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற அலெக்சாண்டரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் சினிமா விநியோகிஸ்தர் என்பதும், ஹோட்டல் அருகில் அந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முடிந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

11- ஆம் தேதி வரை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைப்பு

பின்னர், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், வருகிற செப்டம்பர் 11- ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் சினிமா விநியோகிஸ்தர் அலெக்சாண்டர் அடைக்கப்பட்டார். மேலும், அவரது நண்பரின் ஜெய்யை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: 1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us