AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!

CM Joseph Vijay Key Announcements : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், என்னென்ன அறிவிப்புகள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் விரிவாக தெரிந் து கொள்ளலாம் .

சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Sep 2026 11:53 AM IST

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 2) தொடங்கி நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், வடசென்னை, ஆவடி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் அமைக்கப்படும். மதுரை கடலூர் மாநகராட்சிகள் 9 நகராட்சிகள் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகள் மேம்படுத்த ரூபாய் ஆயிரம் கோடியில் 33 பழமையான கூட்டு குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூபாய் 300 கோடி ஒதுக்கப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூபாய் 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்!

நவீன பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நீர் மேலாண்மை: மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான கலைநீர் பாதாள சாக்கடைகள் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் குடிநீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை ஏற்படுத்த ரூ. 236 கோடி செலவிடப்படும்.

அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை உரக்கழிவு உற்பத்தி: 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் சேலம் நகராட்சியில் ரூ.298 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் கூட்டமைப்பு கட்டமைப்பு: குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்து பகுதிகளிலும் ரூ.1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மட்டுமின்றி பிற மாநகராட்சிகளிலும் நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், நவீன பாதுகாப்பான சாலைகள் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற பசுமையாக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்: பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 130 கோடியில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

பள்ளிகளில் உள் கட்டமைப்பு மேம்பாடு: நகர்புற உள்ளாட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 359 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் சீரமைப்பு: சிதம்பரம் தில்லை நடராஜர் திருத்தேர் விழா நடத்தவும், பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி தரிசனம் செய்யவும், கோவிலை சுற்றியுள்ள பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றை தரைக்கு அடியில் கொண்டு செல்ல ரூ.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் படிக்க: பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!

Follow Us